வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தேனா? ஓபிஎஸ் ட்வீட்!

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தேனா? ஓபிஎஸ் ட்வீட்!

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு கூறியுள்ளதாக வெளியான செய்தி குறித்து விளக்கமளித்துள்ளார்.

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தேனா? ஓபிஎஸ் ட்வீட்!

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை 1987 முதலே பாமக கேட்டு வருகிறது. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்தக் கோரிக்கையை அவர் ஏற்றதாகத் தெரிவில்லை.

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தேனா? ஓபிஎஸ் ட்வீட்!

சமீபத்தில் கூட பாமக இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் அறிவித்தது. இதை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது பாமகவினர் ரயில் மீது கல்வீசி போராட்டம் செய்தனர். இந்த சூழலில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டாம் என்றும் அதனால் மற்ற சமுதாய மக்களின் ஓட்டுகள் வராது என்றும் ஓபிஎஸ் அதிமுக கூட்டத்தில் கூறியதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், “வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.