’கொரோனாவைப் பற்றி மக்கள் பீதி ஏற்படாமல் இருக்கவே அப்படிச் செய்தேன்’ என்ன செய்தார் டிரம்ப்!

 

’கொரோனாவைப் பற்றி மக்கள் பீதி ஏற்படாமல் இருக்கவே அப்படிச் செய்தேன்’ என்ன செய்தார் டிரம்ப்!

கொரோனாவால் அதிக பாதிப்பு அமெரிக்காவுக்குத்தான். ஆனால், அதன் அதிபர் அப்படி இருப்பதாகவே நடந்துகொள்ள வில்லை என்ற புகார் இப்போதும் உண்டு.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 80 லட்சத்து  25 ஆயிரத்து 181 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 1 லட்சத்து 3 ஆயிரத்து 385 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர்.  

அமெரிக்காவில் மட்டும் 65,49,475 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.1,95,239 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

’கொரோனாவைப் பற்றி மக்கள் பீதி ஏற்படாமல் இருக்கவே அப்படிச் செய்தேன்’ என்ன செய்தார் டிரம்ப்!

கொரோனா நோய்த் தொற்றை மிக அலட்சியமாகவே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையாண்டதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த அலட்சியமே இரண்டு லட்சம் பேரை பறிகொடுக்கும் நிலைமைக்கு வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்வதன் வேறு பக்கம் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

டிரம்பை அதிக முறை பேட்டி எடுத்த பத்திரிகையாளர் பாப் உட்வர்ட் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் ட்ரம்ப் கூறியிருப்பதாக உள்ள தகவல்கள் அவர் கொரோனாவை நன்கு புரிந்துவைத்திருக்கிறார் என்று சொல்ல வைக்கின்றன.

’கொரோனாவைப் பற்றி மக்கள் பீதி ஏற்படாமல் இருக்கவே அப்படிச் செய்தேன்’ என்ன செய்தார் டிரம்ப்!

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த பிப்ரவரி இறுதியில் கொரோனாவால்  முதல் மரணம் நடந்தது. ஆனால், இதற்கு முன்பே, பாப் உட்வர்ட்டிடம் டிரம்ப் பேசுகையில், ‘கொரோனா ரொம்ப மோசமான நோய்’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், ஊடகங்களில் அவர் பேசுகையில் இந்த நோய்த் தொற்று குறைத்து மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டதைப் போலவே பேசினார். இந்நோய் தானாகவே சென்று விடும் என்றெல்லாம் கூறியிருந்தார்.

கொரோனாவைக் கண்டு உலகமே அச்சப்படுகிறது. ஆனால், டிரம்ப் ஏன் இப்படி கொரோனாவைப் பற்றி குறைவாக மதிப்பிடுகிறார்? என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் இருந்தது. அதற்கான பதிலாக இந்தப்  புத்தகத்தில். ‘மக்கள் நோய்த் தொற்று செய்திகளால் பீதி அடைந்துவிடக்கூடாது என்பதற்காகவே குறைவாக மதிப்பிட்டதைப் போல பேசினேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.