“எங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்து கொள்ள முடியாது” – அரசை திட்டி தீர்த்த நீதிபதிகள்!

 

“எங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்து கொள்ள முடியாது” – அரசை திட்டி தீர்த்த நீதிபதிகள்!

நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை வேகமாகப் பரவிக் கொண்டிருந்த சமயத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. தகுந்த பாதுகாப்புகளுடன் விழா நடத்தப்படும் என்று அரசு உறுதியளித்திருந்தது. ஆனால் பக்தர்கள் யாரும் மாஸ்க் கூட அணியவில்லை என்பதே நகைமுரண். ஐந்து நாட்களில் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் புனித நீராடினர்.

“எங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்து கொள்ள முடியாது” – அரசை திட்டி தீர்த்த நீதிபதிகள்!

இந்த விழா நடந்துமுடிந்த பிறகு கொரோனா பரிசோதனை செய்ததில் பல்லாயிரக்கணக்கோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. உத்தரகாண்டில் கொரோனாவில் உயிரிழந்தவர்களில் 75 சதவீதத்தினர் கும்பமேளாவில் கலந்துகொண்டவர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியானது. இவ்விவகாரம் அடங்குவதற்கு முன்பே அடுத்தடுத்து மத விழாக்களுக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதை எதிர்த்து உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

“எங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்து கொள்ள முடியாது” – அரசை திட்டி தீர்த்த நீதிபதிகள்!

அப்போது விசாரித்த நீதிபதிகள், “மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பு குறித்து எதையும் கண்டும் காணாதது போல் இருக்க முடியாது. எங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டு மாநிலத்தில் எதுவுமே நடக்காதது போல் செயல்பட முடியாது. கொரோனா பரவல் ஆரம்பித்து ஓராண்டாகியும் அதனைத் தடுக்க மாநில அரசு ஏன் முழுமையாகத் தயாராகவில்லை. இச்சூழலில் மூன்றாவது அலை வரலாம் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கும்பமேளாவின் பாதிப்பிலிருந்து இன்னும் மாநிலம் மீளவில்லை. அதற்குள் புர்னாகிரி மேளா நடந்து, அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளார்கள். கொரோனா பரவல் அதிகரிப்புக்கு இதுபோன்ற திருவிழாக்கள் காரணமா என்பதை ஆராய வேண்டும். ஆண்டு தோறும் நடக்கும் சர்தாம் யாத்திரையையும் நடத்துவதில் மாநில அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் திருவிழாவில் மக்களை அனுமதித்தால் அது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறாது என்று சொல்வதற்கு என்ன நிச்சயம்?” என்று கடுமையாகச் சாடினர்.