வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

 

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில்
இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம்.

பின்னர் எதற்காக ஜே.பி.நட்டாவை சந்தித்தீர்கள்? என்ற கேள்விக்கு, ‘’ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வாழ்த்து கூறினேன்’’என்று தெரிவித்துள்ளார்.

திமுக மீதான அதிருப்தி குறித்த கேள்விக்கு, அதுகுறித்து பதில் சொல்லாமல், ‘’திமுகவில் உள்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும்.
தமிழ்க்கடவுள் முருகனை அவதூறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்’’என்று கூறியிருக்கிறார்.

பாஜக தலைவருடனான சந்திப்பினால் திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ’’இதனால் தலைமை என் மீது நடவடிக்கை எடுத்தால்
பரவாயில்லை’’என்றும் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து சொல்வதற்காகவா தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் டெல்லி சென்று ஜே.பி.நட்டாவை சந்தித்தார் கு.க.செல்வம் என்ற கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.