நான் சாரி கேட்டேனா? அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதில் தவறானது – தங்கர்பச்சான் பரபரப்பு விளக்கம்

 

நான் சாரி கேட்டேனா? அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதில் தவறானது – தங்கர்பச்சான் பரபரப்பு விளக்கம்

மாதந்தோறும் மின் கட்டணம் என்ற முறை வந்தால் தான் உட்பட அனைத்து மக்களும் அதிக கட்டணம் கட்டும் நிலையில் இருந்து தப்பிப்பார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன மாதந்தோறூம் மின் கட்டண முறையை முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று இயக்குநர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்திருந்தார். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, சட்டமன்றத்திலும் அது விவாதமாகி தவறாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நான் சாரி கேட்டேனா? அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதில் தவறானது – தங்கர்பச்சான் பரபரப்பு விளக்கம்

இந்த விவகாரத்தில் தங்கர்பச்சான் நீண்ட விளக்கத்தினை அளித்திருக்கிறார்.

’’தமிழக சட்டமன்றத்தில் நிகழ்ந்த கேள்விக்கான பதில் உரையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் என் கோரிக்கை குறித்தும் பதிலளித்துள்ளார். அதில் என் கோரிக்கை குறித்து அவருடைய பதில் மிகவும் தவறானது என்பதை தெரிவித்து அதற்கான விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன். கடந்த 7.8.2021 ம் தேதி அன்று முதலமைச்சருக்கு ஒரு குடிமகனாக எனது கோரிக்கையை ஊடகங்களின் வாயிலாக அளித்திருந்தேன்.

எனது செய்தி வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே மின்துறை அமைச்சர் என்னிடம் பேச சொன்னதாக மின் துறை அதிகாரி ஒருவர் எனது கைப்பேசிக்கு தொடர்பு கொண்டு உடனே நேரில் வந்து சந்தித்து விளக்கம் அளிப்பதாக கூறினார். நேரில் வந்து விளக்கம் அளிக்கக் கூடிய கோரிக்கை என்னுடையது அல்ல.

நான் சாரி கேட்டேனா? அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதில் தவறானது – தங்கர்பச்சான் பரபரப்பு விளக்கம்

திமுக தேர்தல் வாக்குறுதியாக முதலமைச்சர் அளித்திருந்த அனைத்து மக்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ’மாதாந்திர மின் கட்டண முறை’ பற்றியதுதான் என தெரிவித்து விட்டேன். அவ்வாறு கூறிய பிறகும் இரண்டு முறை தனித்தனியாக அதிகாரிகள் மின் கணக்கை சரி பார்த்து விளக்கமளிக்க என் வீட்டிற்கு வந்தனர். மின் கணக்கீடு குறித்த விளக்கம் எனக்கு தேவையில்லை. முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மாதாந்திர மின் கட்டணம் பற்றிய எனது கோரிக்கையைத் தான் என மீண்டும் கூறினேன். அதை புரிந்து கொண்ட அதிகாரிகள் கட்டணம் குறித்த விவரங்கள் அடங்கிய காகிதம் ஒன்றினை என் கையில் கொடுத்து, அதனை படமாக எடுத்து சென்றனர்.

நான் சாரி கேட்டேனா? அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதில் தவறானது – தங்கர்பச்சான் பரபரப்பு விளக்கம்

அந்தப் படம் சமூக வலைத்தளங்களில் செய்தியுடன் வெளியாகி அதன் பிறகும் மின்துறை அமைச்சர் அவருடைய டுவிட்டர் வலைத்தளத்தில் என் மின் கணக்கு குறித்த சந்தேகத்திற்கு விளக்கம் அளித்து விட்டதாக தெரிவித்து இருந்தார் . அன்று மாலையே என்னை சந்தித்த அதிகாரிகள், என்னுடன் எடுத்துக்கொண்ட படத்துடன் செய்தி ஒன்றினை வெளியிட்டனர். அச்செய்தியில் நான் கூறியபடி எனக்கு விளக்கம் தேவையில்லை . கட்டண முறை மாற்றம் தான் தேவை என்பதை தெளிவுடன் குறிப்பிட்டு வெளியிட்டு இருந்தனர். இந்த செய்தி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு சென்று சேரவில்லை என்பதை இன்று செய்தியாக பார்த்த பின்பே தெரிந்து கொண்டேன்.

சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்களின் மின் துறையைப் பற்றிய கேள்விக்கு, மின்துறை அமைச்சர் பதிலளிக்கும்போது சமூக வலைத்தளங்களில் மின் கணக்கில் குளறுபடி உள்ளதாக நான் புகார் தெரிவித்ததாகவும் அதற்கு உடனே அதிகாரிகள் விளக்கம் அளித்து விட்டதாகவும் அதன் பின் நான் ’சாரி’ எனக் கூறிவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். அத்துடன் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான தவறான செய்திகளை நான் வெளியிட்டு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

நான் சாரி கேட்டேனா? அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதில் தவறானது – தங்கர்பச்சான் பரபரப்பு விளக்கம்

எனது வேண்டுகோளை புகார் எனக் கூறியதுடன் அதிகாரிகள் விளக்கம் அளித்த உடன் ’சாரி’ என கூறியதாகவும் தவறான தகவலை சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எழுதித்தந்த அதிகாரிகள்தான் இந்த தவறான பொய்யான செய்தியை அமைச்சர் அவர்களுக்கு தந்தார்களா.

எதனால் என்னுடைய கோரிக்கை இறுதிவரை புரிந்து கொள்ள முடியாமல் போனது என்பதை அமைச்சர் அவர்கள் தெரியப்படுத்த வேண்டும். அமைச்சர் அவர்கள் இப்போதாவது உண்மையை புரிந்துகொண்டு நான் விளக்கம் கேட்டு வருத்தம் தெரிவிக்கவில்லை எனவும் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் . அத்துடன் இவ்வளவு காலம் என்னுடைய கோரிக்கை அமைச்சர் அவர்களுக்கும் முதல் அமைச்சர் அவர்களுக்கும் எட்டாமல் இருந்தால் இப்பொழுதாவது ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நான் சாரி கேட்டேனா? அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதில் தவறானது – தங்கர்பச்சான் பரபரப்பு விளக்கம்

மின் கட்டணம் மாதம் தோறும் எடுக்கப்பட்டிருந்தால் நான் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களும் பல மடங்கு தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியது இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் ஒரு குடிமகனாக முதல் அமைச்சர் அவர்களுக்கும் மின்துறை அமைச்சர் அவர்களுக்கும் இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல கொரோனா தொற்றில் வேலை இழந்து தொழிலை இழந்து வருமானமின்றி பள்ளி கல்லூரிகளில் தங்களின் பிள்ளைகளை படிக்க வைக்க தவித்துக்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன். அத்துடன் சட்டமன்ற அவை குறிப்பில் இடம் பெற்றுவிட்ட என் குறித்தான தவறான பொய்யான பதிவை நீக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். அதற்கான நடவடிக்கை எடுக்கக்கோரி இதையே சட்டமன்ற சபாநாயகர் அவர்களுக்கும் எனது கோரிக்கையாக அளிக்கிறேன்.