புதிய கெட்டப்பில் தோனி… சோஷியல் மீடியாவில் வைரலாகும் போட்டோ!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் தனித்த புகழ்கொண்டவர் மகேந்திரசிங் தோனி. ஏனெனில், கிரிக்கெட் பற்றித் தெரியாதவர்கள்கூட கிரிக்கெட் வீரர்களில் சிலரைத் தெரிந்துவைத்துக்கொள்வார்கள். கபில்தேவ், கவாஸ்கர், சச்சின் எனும் இந்த வரிசையில் மகேந்திரசிங் தோனியும் நிச்சயம் இடம்பிடிப்பார்.

Dhoni

கபில்தேவ்க்கும் மகேந்திரசிங் தோனிக்கும் ஒரு சிறப்பான பெயர் இந்திய கிரிக்கெட்டில் உண்டு. ஆம்! இருவரின் தலைமையில் சென்ற இந்திய கிரிக்கெட் அணிதான் உலக கோப்பையை வென்று வந்தது. கபில்தேவ் தலைமையில் 1983 ஆம் ஆண்டில்; தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டிலும் வெற்றி கோப்பைகள் இந்தியாவுக்கு வந்தன.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதும் தோனி தமிழகத்திற்கும் இன்னும் பிடித்தமான வீரராக மாறிவிட்டார். ஏனெனில், முதல் சீசனிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே தொடர்ந்து இருந்துவருகிறார். சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் எல்லாமே மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழியும்.

மகேந்திசிங் தோனியின் பிறந்த நாள் அடுத்த மாதம் 7-ம் தேதிதான் என்றாலும், அவரின் ரசிகர்கள் இப்போதே வாழ்த்துகளைப் பரிமாற தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் கொரோனா லாக்டெளனில் புதிய கெட்டப்பில் இருக்கும் போட்டோவை ட்விட்டரில் பதிந்துள்ளார். தாடியுடன் வேலை செய்யும் அந்த போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...