தோனியா… ரோஹித்தா? முதல் போட்டியின் வெற்றி கேப்டன் யார்? ஓர் அலசல்

 

தோனியா… ரோஹித்தா? முதல் போட்டியின் வெற்றி கேப்டன் யார்? ஓர் அலசல்

ஐபிஎல் திருவிழா இன்று மாலை உற்சாகமாகத் தொடங்க விருக்கிறது. கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகம் பரவி வருவதால் ஐக்கிய அமீரகத்தில் இந்த ஆண்டு நடைபெறுகிறது.

இன்று இரவு நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதவிருக்கின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை. இரண்டுமே ஐபிஎல் தொடரில் பல முறை மோதியிருக்கின்றன.

தோனியா… ரோஹித்தா? முதல் போட்டியின் வெற்றி கேப்டன் யார்? ஓர் அலசல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. மும்பை இண்டியன்ஸ் அணியோ 4 முறை கோப்பையை வென்றிருக்கிறது.

ஐபிஎல் இறுதிபோட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 8 முறை ஆடியிருக்கிறது. மும்பை இண்டியன்ஸ் 5 முறை ஆடியிருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் 17 முறை மும்பை இண்டியன் அணியும் 11 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வென்றிருக்கிறது.

தோனியா… ரோஹித்தா? முதல் போட்டியின் வெற்றி கேப்டன் யார்? ஓர் அலசல்

கடைசியாக இந்த இரு அணிகளுக்கு இடையே நடந்த ஐந்து போட்டிகளிலும் மும்பை இண்டியன்ஸ் அணியே வெற்றிப்பெற்றுள்ளது.

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக ரெய்னா அதிக ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால், கடைசி ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ரெய்னா நல்ல ஸ்கோர் எடுத்திருந்தார். அதுவும் ஐந்து போட்டிகளிலும் தோற்க ஒரு காரணம். தற்போது ரெய்னா அணியில் இல்லாதது பலவீனமே.

தோனியா… ரோஹித்தா? முதல் போட்டியின் வெற்றி கேப்டன் யார்? ஓர் அலசல்

ஆனால், மும்பைக்கு எதிராக ரெய்னாவை விடவும் சிறப்பாக விளையாடும் ஷேன் வாட்சன் இருப்பது பலம். கூடவே அம்பதி ராயுடு, பிளஸிஸ், முரளி விஜய், பிராவோ, ருத்ராஜ், ரவிந்திர ஜடேஜா, தல தோனி என பேட்டிங்கில் வலுவான பட்டியலே உள்ளது சிஎஸ்கேவிடம்.

பவுலிங்கிலும் அசத்தலான வீரர்கள் உள்ளனர். தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்,சாம் குரண், சாய் ஜுச்கீர் என வெறித்தனமாகக் காத்திருக்கிறார்கள்.

தோனியா… ரோஹித்தா? முதல் போட்டியின் வெற்றி கேப்டன் யார்? ஓர் அலசல்

மும்பை அணியில் பெரும் பலம் மலிங்காவின் அதிரடி பந்துவீச்சு. அவர் இந்த சீசனில் ஆடவில்லை. அது அந்த அணிக்கு பேரிழப்பு. ஆனால், அவரின் இடத்தை போல்ட் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இண்டியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், பொலார்ட், ஹிர்த்திக் பாண்டியா, இசான் கிஷான் எனப் பட்டாளமே உள்ளது. பவுலிங் எனும்போது பும்ரா எனும் பேராயுதம் மும்பை அணியிடம் உள்ளது. அவர் தவிர்த்து, போல்ட், யாதவ், மெக்லனகன் என நல்ல வரிசை உள்ளது.

தோனியா… ரோஹித்தா? முதல் போட்டியின் வெற்றி கேப்டன் யார்? ஓர் அலசல்

இரு அணிகளின் பலம் கிட்டத்தட்ட ஒரே அளவாகத்தான் உள்ளது.  இரு அணிகளும் வெல்வதற்கான வாய்ப்புகள் சமமாகவே உள்ள நிலையில் இன்னொரு விஷயத்தையும் பார்த்துவிடலாம். அதுதான் கேப்டன் ஷிப்.

மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா 104 போட்டிகளில் கேப்டனாக இருந்து 60 போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறார். இவரின் வெற்றி சதவிகிதம் 58.65 ஆக இருக்கிறது.

தோனியா… ரோஹித்தா? முதல் போட்டியின் வெற்றி கேப்டன் யார்? ஓர் அலசல்

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி 174 போட்டிகளில் ஆடி 104 போட்டிகளில் வென்றிருக்கிறார். தோனியின் வெற்றி சதவிகிதம் 60.11. தோனி வென்ற போட்டிகளின் எண்ணிக்கையே ரோஹித் ஷர்மா கேப்டனாக ஆடிய போட்டிகளின் எண்ணிக்கை.

ஆக, அணிகளின் பலம் சமமாக இருக்கும் பட்சத்தில் எந்த வீரர்களை எப்படிப் பயன்படுத்த போகிறோம் என்பதில்தான் யாருக்கு வெற்றி என்பது முடிவாகியிருக்கிறது.

தோனியா… ரோஹித்தா? முதல் போட்டியின் வெற்றி கேப்டன் யார்? ஓர் அலசல்

எனவே, அந்த வகையில் பார்க்கும்போது ஐபிஎல் போட்டியில் மட்டுமல்ல, இந்திய அணியையும் சிறப்பாக வழிநடத்தியவர் தோனி. அதனால், இந்த மேட்ச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்ல 51 சதவிகிதமும் மும்பை இண்டியன்ஸ் வெல்ல 49 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது.