’தோனி ஓய்வா…’ பாகிஸ்தான் ரசிகரின் அதிரடி முடிவு

 

’தோனி ஓய்வா…’ பாகிஸ்தான் ரசிகரின் அதிரடி முடிவு

மகேந்திர சிங் தோனிக்கு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு அழிக்க முடியாத பெருமைகள் உண்டு.

28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு மஹேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணி மீண்டும் உலககோப்பையை வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது தோனியின் கேப்டன் ஷிப்.

’தோனி ஓய்வா…’ பாகிஸ்தான் ரசிகரின் அதிரடி முடிவு

டி20 முதல் உலககோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனும் மஹேந்திர சிங் தோனிதான். இனி எத்தனை அணி கோப்பையை வென்றாலும் முதல் அணியின் தலைவன் எனும் பெயர் தோனிக்கே.

கடந்த ஓராண்டு காலமாக அணியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட வீரராகவே தோனி கருதப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஓய்வை அறிவித்தார். இது அவரின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே அதிர்ச்சியும் வருத்தமும் தந்தது.

’தோனி ஓய்வா…’ பாகிஸ்தான் ரசிகரின் அதிரடி முடிவு

தோனி ஓய்வு வருத்தம் எல்லைக் கடந்தும் சென்றிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தோனியின் ரசிகர் அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகம்மது பஷீர். தீவிரமான கிரிக்கெட் ரசிகர். அதை விடவும் தீவிரமான தோனி ரசிகர், தற்போது சிகாகோ நகரில் வசிக்கிறார்.

எப்போதுமே அனல் பறக்கும் போட்டி என்றால் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள்தான். ஆனால், அந்தப் போட்டிக்கு வரும் முகம்மது பஷீர், பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்காது தோனிக்கு தன் ஆதரவை அளிப்பார்.

பஷீரின் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் ரசிகருக்கு எரிச்சலைத் தரும். ஆனால், தான் ஒரு கிரிக்கெட் ரசிகர். வீரரின் நாடெல்லாம் முக்கியம் அல்ல என்பதில் உறுதியாக இருப்பார் பஷீர்.

’தோனி ஓய்வா…’ பாகிஸ்தான் ரசிகரின் அதிரடி முடிவு

ஒரு போட்டியின் போது தனது அறைக்கு பஷீரை அழைத்த தோனி, தனது ஜெர்ஸியை பரிசாக அளித்தார். அதைப் பொக்கிஷம்போல ஏந்திச்சென்றார் பஷீர்.

இந்தளவுக்கு தோனியின் ரசிகருக்கு தோனியின் ஓய்வு என்ன தாக்கத்தை அளித்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்தானே..

தற்போது உடல்நலமில்லாமல் உள்ள பஷீர், “ஒரு போட்டியின்போது தோனி ஓய்வு அறிவித்திருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். தோனி இனி விளையாடாததால் இனி தானும் மைதானத்திற்குச் சென்று கிரிக்கெட் பார்க்க மாட்டேன் என்று முடிவெடுத்திருக்கிறாராம் பஷீர்.