வெற்றியோ, தோல்வியோ போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள்- தோனி

 

வெற்றியோ, தோல்வியோ போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள்- தோனி

பெங்களூர் அணியுடனான இன்றையப் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்திற்கு முன்னேறியது. குறிப்பாக சென்னை அணியில் வருதுராஜ் கெய்க்வாட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்களை எடுத்தார்.

ஆட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியின் கேப்டன் தோனி, “மிகச்சிறந்த விளையாட்டுகளில் இந்த ஆட்டமும் ஒன்று. விக்கெட்டுகளை தவறாமல் எடுக்க முடிந்தது. ஸ்பின்னர்கள் மிக சிறப்பாக விளையாடினர். இந்தப் போட்டியில் திட்டமிட்டப்படி எல்லாமே சிறப்பாக அமைந்தது. பிட்ச் ஸ்லோவாக இருந்தது. இந்த தொடரில் இன்றைய பேட்டிங்கை விட மற்ற அனைத்து பேட்டிங்கும் மிகவும் மோசமாக இருந்தது. இன்றைய போட்டியில் ருதுராஜ் சிறப்பாக விளையாடினார். அவருக்கு எப்போது ஷாட்ஸ் ஆட வேண்டும் என்று தெளிவாக தெரிந்திருக்கிறது. அதன்படி அவர் ரன்களை சேர்த்தார். இந்த போட்டியில் இளம்வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

வெற்றியோ, தோல்வியோ போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள்- தோனி

வெற்றியோ தோல்வியோ விளையாட்டை அனுபவித்து மகிழ்ச்சியுடன் விளையாடுவோம். ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வோம். புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. போட்டியை போட்டியாக பார்த்தால் தோல்வி ஏற்படும்போது அது வேதனையை ஏற்படுத்தும்” எனக் கூறினார்.