100 கேட்ச்களை பிடித்த என்ற பெருமையை பெற்றார் தோனி!

 

100 கேட்ச்களை பிடித்த என்ற பெருமையை பெற்றார் தோனி!

ஐ.பி.எல் போட்டிகளில் 100 கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் எம்.எஸ்.தோனி!

ஐபிஎல் 2020 போட்டிகள் உற்சாகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்ற ஆண்டு சாம்பியன் மும்பையை எதிர்கொண்டது தல தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் முதல் வெற்றி பெற்றது. யார் கண் பட்டதோ அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை பேட்டிங்கில் வழக்கம்போல முரளி விஜய், சொதப்ப, டூ பிளஸி மானத்தைக் காப்பாற்றினார். விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளிலும் சென்னை அணி கடைசி வரை போராடி தோல்வியே கிடைத்தது. தோனி அணியை சிறப்பாக வழிநடத்தவில்லை என்றும் கூறப்பட்டது.

100 கேட்ச்களை பிடித்த என்ற பெருமையை பெற்றார் தோனி!

சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பராக வலம் வந்தார் தோனி. அவர் 98 டி20 போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ஆடி உள்ள அவர், 91 விக்கெட் வீழ்ச்சி செய்துள்ளார். இதில் 57 கேட்ச், 34 ஸ்டம்பிங் அடங்கும். இந்நிலையில் தற்போது புதிய சாதனையில் படைத்துள்ளார் கேப்டன் தோனி. ஐ.பி.எல் போட்டிகளில் 100 கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி பெற்றார். ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோற்றத்தற்கு தோனியே காரணம் என சிலர் விமர்சித்துவந்த நிலையில், சாதனையை நிகழ்த்தி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.