“தோனியை விட வேறு யாரால் சிறப்பாக வழிநடத்த முடியும்?” – புகழ்ந்து தள்ளிய பிசிசிஐ!

 

“தோனியை விட வேறு யாரால் சிறப்பாக வழிநடத்த முடியும்?” – புகழ்ந்து தள்ளிய பிசிசிஐ!

ஐபிஎல் திருவிழா முடிந்த அடுத்த இரு நாட்களில் உலகக்கோப்பை டி20 திருவிழா தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு அந்த நாட்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் இந்திய அணி வீரர்களின் விவரத்தை பிசிசிஐ அறிவித்தது. அணி தேர்வு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே அமைந்துள்ளது. இரண்டு சர்ப்ரைஸ்களையும் வழங்கியுள்ளது.

“தோனியை விட வேறு யாரால் சிறப்பாக வழிநடத்த முடியும்?” – புகழ்ந்து தள்ளிய பிசிசிஐ!

ஒன்று நான்காண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வொயிட் பால் கிரிக்கெட்டுக்குள் அஸ்வின் அடியெடுத்து வைக்கிறார். மற்றொன்று ரொம்பவே ஸ்பெஷலான சர்ப்ரைஸ். ஆம் இந்திய அணியின் ஆலோசகராக தல தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரசிகர்களுக்கு இதைவிட வேறு என்ன அன்பளிப்பு வேண்டும். 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தான் தோனியைக் கடைசியாக இந்திய ஜெர்சியில் பார்த்தது. அதற்குப் பிறகு இப்போது தான் இந்திய அணியுடன் இணையவிருக்கிறார்.

“தோனியை விட வேறு யாரால் சிறப்பாக வழிநடத்த முடியும்?” – புகழ்ந்து தள்ளிய பிசிசிஐ!

உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற தோனி இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய இழப்பு என ரசிகர்கள் வருத்தம் கொண்டிருந்தனர். அது யாருக்கு கேட்டதோ இல்லையோ பிசிசிஐக்கு கேட்டுவிட்டது. ரசிகர்களின் மனக்குமுறல்களைப் போக்க தோனியை ஆலோசகராக நியமித்துள்ளது. இதில் கோலியின் விருப்பமும் அடங்கியது. தாங்கள் எந்த அணிக்கு கேப்டன் ஆனாலும் எங்களுடைய கேப்டன் தோனி தான் கோலியும் ரோஹித்தும் அடிக்கடி கூறுவார்கள். அது உண்மை என செயலிலும் செய்துகாட்டிவிட்டார் கிங் கோலி.

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது ஏன் என பிசிசிஐ தரப்பிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் கேட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த நிர்வாகி ஒருவர், “இந்திய அணியை வழிநடத்தி செல்ல தோனி மட்டும் தான் மிகச் சிறந்தவர். அவரை விட யாராலும் அதை திறமையாகச் செய்துவிட முடியாது. அணியில் அவர் இருப்பதே வீரர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். அதை எங்கள் செயலாளர் ஜெய் ஷாவும் விரும்பினார். அதன் படி தோனிக்கு போன் செய்து அவரது விருபத்தையும் தெரிந்து கொண்ட பிறகே இந்த அறிவிப்பை வெளியிட்டோம்” என்றார்.