தோனிக்கு பிரியாவிடை மேட்ச் நடத்த வாய்ப்பில்லை! – பி.சி.சி.ஐ அதிகாரி தகவல்

 

தோனிக்கு பிரியாவிடை மேட்ச் நடத்த வாய்ப்பில்லை! – பி.சி.சி.ஐ அதிகாரி தகவல்

தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட்டதால் இனி அவருக்கு பிரியாவிடை போட்டி நடத்த வாய்ப்பில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் தோனி திடீரென்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் அவரது ஒப்பந்தத்தையும் புதுப்பிக்கவில்லை.

தோனிக்கு பிரியாவிடை மேட்ச் நடத்த வாய்ப்பில்லை! – பி.சி.சி.ஐ அதிகாரி தகவல்
தோனி ஓய்வு அறிவிப்பு உலக கிரிக்கெட் ரசிகர்கள் அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு பிரியாவிடை போட்டி நடத்த கூட பி.சி.சி.ஐ முன்வராதது கண்டனத்தைக் குவித்தது. மேலும், மோடிக்கு கடைசியாக பிரியாவிடை போட்டி நடத்தி அவரை மரியாதையுடன் ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து பிசிசிஐ அதிகாரிகளிடம் விசாரித்த போது, “தோனிக்கு பிரியாவிடை போட்டியை சிறப்பான முறையில் நடத்த நாங்கள் தயாராகவே இருந்தோம்.

தோனிக்கு பிரியாவிடை மேட்ச் நடத்த வாய்ப்பில்லை! – பி.சி.சி.ஐ அதிகாரி தகவல்

ஆனால் எல்லாவற்றிலும் வித்தியாசமான வீரரான தோனி, தன்னுடைய சர்வதேச போட்டிகள் ஓய்வு அறிவிப்பிலும் வித்தியாசமாகவே நடந்து கொண்டார். இனி அவருக்கு பிரியாவிடை போட்டை நடத்துவதற்கு வாய்ப்பில்லை.
இருப்பினும், ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த பிறகு தோனிக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுவது பற்றி பிசிசிஐ முடிவு செய்யும். அதற்கு தோனியும் ஒத்துக்கொண்டால் போட்டி ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.