தோனியா… தினேஷ் கார்த்திக்கா? இன்றைய வெற்றி யாருக்கு? #CSKvsKKR #IPL

தோனியா… தினேஷ் கார்த்திக்கா? இன்றைய வெற்றி யாருக்கு? #CSKvsKKR #IPL

ஐபில் திருவிழாவில் நேற்று மும்பை இண்டியன்ஸ் அணி, பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதன்மூலம் பாயிண்ட் டேபிளில் உச்சமான முதலிடத்தை அடைந்துள்ளது.

இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையேதான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை ஐந்து போட்டிகளில் ஆடி, இரண்டில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் கண்டிருக்கிறது.

தோனியா… தினேஷ் கார்த்திக்கா? இன்றைய வெற்றி யாருக்கு? #CSKvsKKR #IPL

கடைசியாக நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வாட்சனும் டூ பிளஸியும் அதிரடியாக விளையாடி, ஒரு விக்கெட் கூட விழாமல் 181 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

தோனியா… தினேஷ் கார்த்திக்கா? இன்றைய வெற்றி யாருக்கு? #CSKvsKKR #IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம்: வாட்ஸன் ஃபுல் ஃபார்ம்க்குத் திரும்பியிருப்பது ஆகச் சிறந்த பலம். ஏனெனில், பெரிய ஷாட்களை சாதாரணமாக அடிக்கக்கூடியவர். இதன்மூலம் வாட்ஸன் – டூ பிளஸி எனும் வெற்றிகரமான ஓப்பனிங் சென்னைக்கு அமைந்துவிட்டது. ராயுடு காயத்திலிருந்து மீண்டிருப்பதும் பலமே. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சரியாக ஆடவில்லை. ஆனாலும் ஒரு போட்டியை வைத்த் அவரை மதிப்பிட முடியாது. அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் நம்பலாம். தோனி, ரவிந்திர ஜடேஜா, சாம்கர்ரன், பிராவோ என பேட்டிங் நன்றாகவே இருக்கிறது.

தோனியா… தினேஷ் கார்த்திக்கா? இன்றைய வெற்றி யாருக்கு? #CSKvsKKR #IPL

பவுலிங்கைப் பொறுத்தவரை தாக்கூர், சாம் கர்ரன், பிராவோ, தீபக் சாஹர், சாவ்லா பார்ட் டைமாக ஜடேஜா என்று பவுலிங் லைனும் சிறப்பே. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தாக்கூர் ரன்களை அதிகம் கொடுத்தாலும் கே.எல்.ராகுல், பூரண் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தோனியா… தினேஷ் கார்த்திக்கா? இன்றைய வெற்றி யாருக்கு? #CSKvsKKR #IPL

பலவீனம்: சந்தேகமே இல்லை கேதர் ஜாதவ் ஃபார்ம் அவுட்தான். நான்காவது பேட்ஸ்மேனாக இறங்குபவருக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. ஆட்டத்தின் வெற்றி அல்லது தோல்வியை முடிவு செய்வதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், கேதார் ஜாதவ், ஐந்து போட்டிகளில் ஒன்றில்கூட சொல்லும்படி ஆட வில்லை. இன்றைய போட்டியில் 11 பேரில் அவர் இடம்பெற மாட்டார் என்றே நம்பலாம். அவருக்குப் பதில் ருத்ராஜ் கெய்க்வாட் இறங்கினாலும் இதே நிலைதான். புதிய வீரருக்கு வாய்ப்பு கொடுத்தாவது பார்க்கலாம்.

பவுலிங்கில் சாவ்லா, தாக்கூர், சில சமயம் ஜடேஜா ரன்களை வாரிக்கொடுத்து விடுகிறார்கள். அதைக் கட்டுப்படுத்தினால் நல்லது.

தோனியா… தினேஷ் கார்த்திக்கா? இன்றைய வெற்றி யாருக்கு? #CSKvsKKR #IPL

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் ஆடி, 2-ல் வென்று 2-ல் தோற்றிருக்கிறது.

கொல்கத்தா அணியின் பலம்: கில், தினேஷ் கார்த்திக், ரானா, மோர்கன், ரஸல், கம்மின்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை தருமளவு விளைடி வருகிறார்கள். ஹைதராபாத் அணிக்கு எதிராக, கில் 72, மோர்கன் 42, ரானா 26 என அடித்து வெற்றியைத் தேடி தந்தார்கள். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரஸலும் நன்றாகவே ஆடினார்.

தோனியா… தினேஷ் கார்த்திக்கா? இன்றைய வெற்றி யாருக்கு? #CSKvsKKR #IPL

பவுலிங்கைப் பொறுத்தவரை 7 பவுலர்களைக்கூட பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. கம்மின்ஸ், சுனில் நரேன், ஷிவம் மாவி, நாகக்கோட்டி என ரன் அதிகம் கொடுக்காது, விக்கெட் பறிக்கும் பவுலர்கள் இருக்கிறார்கள். ரஸல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தியும் நன்கு வீசி வருகிறார்கள்.

தோனியா… தினேஷ் கார்த்திக்கா? இன்றைய வெற்றி யாருக்கு? #CSKvsKKR #IPL

பலவீனம்: ஓப்பனிங் இறங்கும் சுனில் நரேன் ஒரு போட்டியில்கூட கில்லோடு சேர்ந்து நல்ல பார்டனர்ஷிப் போட்டதே இல்லை. அவரை அந்த இடத்தில் இறக்க வேண்டாம் எனப் பலரும் சொன்னாலும் கேப்டன் தினேஷ் கார்த்திக் விடாப்பிடியாக இருக்கிறார். அடுத்து, தினேஷ் கார்த்திக் பேட்ஸ்மேனாக மும்பையோடு 30 ரன்களை அடித்தார். அடுத்தடுத்த போட்டிகளில் சொல்லும்படி ஆட வில்லை. அவரின் கேப்டன்ஷிப் பற்றிய விமர்சனங்களும் கடுமையாக வரத் தொடங்கி விட்டன.

தோனியா… தினேஷ் கார்த்திக்கா? இன்றைய வெற்றி யாருக்கு? #CSKvsKKR #IPL

இரு அணிகளும் பாயிண்ட் டேபிளில் முன்னேற இன்றைக்குக் கடுமையாகப் போராடும். ஆயினும் ஓரிரு சதவிகிதம் வெற்றி வாய்ப்பு கூடுதலாக சென்னைக்கே இருக்கிறது.