வட்டி வருவாய் சரிவு.. திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லாபம் ரூ.314 கோடி

 

வட்டி வருவாய் சரிவு.. திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லாபம் ரூ.314 கோடி

திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (டி.எச்.எப்.எல்.) 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.314.45 கோடி ஈட்டியுள்ளது.

திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (டி.எச்.எப்.எல்.) தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டி.எச்.எப்.எல். 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.314.45 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 4 மடங்குக்கும் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் டி.எச்.எப்.எல். நிகர லாபமாக ரூ.70.10 கோடி ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய் சரிவு.. திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லாபம் ரூ.314 கோடி
டி.எச்.எப்.எல்.

2021 ஜூன் காலாண்டில் டி.எச்.எப்.எல். நிறுவனத்தின் மொத்த வருவாய் 14 சதவீதம் குறைந்து ரூ.2,001.36 கோடி ஈட்டியுள்ளது. டி.எச்.எப்.எல். நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் மொத்த வருவாயாக ரூ.2,328.86 கோடி ஈட்டியிருந்தது. கடந்த 2021 ஜூன் காலாண்டில் டி.எச்.எப்.எல். நிறுவனத்தின் வட்டி வருவாய் ரூ.1,990.72 கோடியாக குறைந்துள்ளது.

வட்டி வருவாய் சரிவு.. திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லாபம் ரூ.314 கோடி
டி.எச்.எப்.எல்.

2021 ஜூன் காலாண்டில் டி.எச்.எப்.எல். நிறுவனத்தின் செலவினம் ரூ.1,553.74 கோடியாக குறைந்துள்ளது. 2020 ஜூன் காலாண்டில் டி.எச்.எப்.எல். நிறுவனம் ரூ.2,236.05 கோடியை செலவினமாக மேற்கொண்டு இருந்தது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (மும்பை அமர்வு) இந்த ஆண்டு ஜூன் மாதம் கடனில் சிக்கிய டி.எச்.எல்.எல். நிறுவனத்துக்காக பிரமல் கேபிடல் அண்டு ஹவுசிங் பைனான்ஸ் சமர்ப்பித்த தீர்மான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.