காதல் கணவனின் ஆன்லைன் ரம்மி மோகம் : நடுத்தெருவுக்கு வந்த இளம்பெண்!

 

காதல் கணவனின் ஆன்லைன் ரம்மி மோகம் :  நடுத்தெருவுக்கு வந்த இளம்பெண்!

ஆன்லைன் ரம்மியால் நகைகளை இழந்த பெண் கணவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த நத்தக்காட்டூரை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மணிகண்டன் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவன் மனைவி இருவரும் ஈரோட்டில் வாடகை வீட்டில் குடியேறி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

காதல் கணவனின் ஆன்லைன் ரம்மி மோகம் :  நடுத்தெருவுக்கு வந்த இளம்பெண்!

இருப்பினும் சில மாதங்களிலேயே தமிழ் செல்விக்கு மணிகண்டனை குறித்த உண்மைகள் தெரிய வர ஆரம்பித்தன. அவர் ஊதாரித்தனமாக வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது,. இதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வியின் வீட்டில் இவர்களின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் மகளுக்கு 30 சவரன் நகைகளை வரதட்சணையாக கொடுத்தனர்.

காதல் கணவனின் ஆன்லைன் ரம்மி மோகம் :  நடுத்தெருவுக்கு வந்த இளம்பெண்!

இதை தொடர்ந்து மணிகண்டன் தனது மாமனாரின் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அறிந்த தமிழ்செல்வி மணிகண்டனிடம் இதுகுறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மணிகண்டனின் நடவடிக்கையில் சந்தேகம் வலுத்ததால் அவர் தனது நகைகளை சரிபார்த்து உள்ளார் அப்போது அதிலிருக்கும் அனைத்தும் போலி நகைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இதுகுறித்து 2019ஆம் ஆண்டு தமிழ் செல்வி தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் நகைகளை விற்று ஆன்லைனில் ரம்மி விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது அத்துடன் இந்த நகைகளை இன்னும் 6 மாத காலத்தில் தந்து விடுவதாக கூறி மணிகண்டன் போலீசிடம் எழுதிக் கொடுத்து விட்டு தலைமறைவாகி உள்ளார்.

காதல் கணவனின் ஆன்லைன் ரம்மி மோகம் :  நடுத்தெருவுக்கு வந்த இளம்பெண்!

இந்நிலையில் 6 மாத காலமாகியும் பணத்தையும் நகைகளையும் திருப்பி கொடுக்காத மணிகண்டன் வீட்டின் வாசலில் தமிழ்செல்வி தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பல குடும்பங்களை சீரழித்து வரும் இந்த ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு சமீபத்தில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.