கொரோனா அச்சம் – கிராம சாலையை முள்வேலியிட்டு அடைத்த மக்கள்!

 

கொரோனா அச்சம் – கிராம சாலையை முள்வேலியிட்டு அடைத்த மக்கள்!

தருமபுரி

தருமபுரி அருகே கொரோனா அச்சம் காரணமாக கிராமத்திற்குள் வெளிநபர்கள் வராமல் இருக்க சாலைகளை முள்வேலி கொண்டு பொதுமக்கள் அடைத்தனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளது. நோய் தொற்று காரணமாக தினசரி உயிரிழப்புகளும் உயர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா அச்சம் – கிராம சாலையை முள்வேலியிட்டு அடைத்த மக்கள்!

இந்த நிலையில், காரிமங்கலம் அடுத்த மகேந்திரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வீராசனூர் பகுதி மக்கள் கொரோனா பரவலை தடுக்க, பொதுமக்கள் தங்களது வீடுகளில் வேப்பிலை கட்டியும், மஞ்சள் தெளித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், கிராமத்தில் இருப்பவர்கள் வெளியூர்களுக்கு சென்று வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மூலம் தொற்று ஏற்படாமல் இருக்க கிராமத்தின் எல்லையில் முட்செடிகளை வெட்டிபோட்டு தடுப்பு அமைத்துள்ளனர். மேலும், அறிமுகம் இல்லாத நபர்கள் வருவதை தடுக்கும் பொருட்டு 24 மணிநேரமும தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரு