தர்மபுரி- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

தர்மபுரி- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

தர்மபுரி

ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.

தர்மபுரி- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கலில், கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளை அனுமதிக்கப்படவில்லை. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நிபந்தனைகளுடன் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

தர்மபுரி- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்கள் போதிய முன் ஏற்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளனது. ஒகேனக்கலில் மட்டும் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில் தடை நீடித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தர்மபுரி- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

பரிசல் ஓட்டிகள், சமையல் செய்யும் தொழிலாளர்கள், ஆயில் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள், கடைக்காரர்கள் என பல்வேறு தரப்பினரும், நிபந்தனைகளுடன் ஒகேனக்கலில் சுற்றுலாபயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 

தர்மபுரி- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

இந்த நிலையில், ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேரில் ஆய்வு நடத்தினார். தமிழ்நாடு ஓட்டலில் நடந்த கூட்டத்தில் பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.  இதையடுத்து சில முன்னேற்பாடுகளுடன் அடுத்த வாரத்தில் சுற்றுலாபயணிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.