தர்மபுரி: பூட்டிய கடைகளில் திருடிய 4 சிறுவர்கள் -சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்த போலீசார்

தர்மபுரி: பூட்டிய கடைகளில்  திருடிய 4 சிறுவர்கள் -சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்த போலீசார்

தர்மபுரி வெண்ணாம்பட்டியில் வசிப்பவர் சிவா(28). இவர் தர்மபுரி அடுத்த தடங்கம் பகுதியில் பை-பாஸ் சாலையை ஒட்டி மளிகை மற்றும் டீ கடை நடத்தி வருகிறார். திங்கள் கிழமை இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். செவ்வாய் கிழமை காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடைக்குள் பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணம், அரை பவுன் மோதிரம், ஐந்தாயிரம் ரூபாய் மதிபுள்ள பீடி, சிகரெட் பண்டல்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

தர்மபுரி: பூட்டிய கடைகளில்  திருடிய 4 சிறுவர்கள் -சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்த போலீசார்

இதுபற்றி சிவா அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 சிறுவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் கூறிய தகவல் முரண்பட்டதாக இருந்ததால் வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில், கட்டிங் பிளேயர், ஸ்க்ரூ ட்ரைவர் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை இருந்தன. எனவே போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது சிவாவின் மளிகை கடையில் திருடியதையும், சுற்று வட்டார பகுதிகளில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்கள் அனைவரும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் என்பதால் 4 பேரையும் போலீசார் சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

தர்மபுரி: பூட்டிய கடைகளில்  திருடிய 4 சிறுவர்கள் -சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்த போலீசார்