தர்மபுரி: ’’ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஜப்பான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது’’-எம்.பி. செந்தில்குமார் பேட்டி

தர்மபுரி: ’’ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஜப்பான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது’’-எம்.பி. செந்தில்குமார் பேட்டி

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் பகுதியை மேம்படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது. நிச்சயமா ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஒகேனக்கல் சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றம் செய்யப்படும்.ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஜப்பான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது என்று தெரிவித்தார் தர்மபுரி எம்.பி செந்தில்குமார்.

தர்மபுரி: ’’ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஜப்பான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது’’-எம்.பி. செந்தில்குமார் பேட்டி

ஒகேனக்கலில் செய்தியாளா்களிடம் பேசும்போது அவர் இதை தெரிவித்தார்.

அவர் மேலும், ’’ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாவை நம்பி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். மீன் சமைப்பவர்கள் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் இதனை நம்பி உள்ளனர். தொழிலாளர்களுக்கு 8 மாதங்களாக அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. ஒரு மாதம் மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்கி மீதமுள்ள ஏழு மாத இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. இவர்களின் வாழ்வாதாரம் குறித்த குறையை கூட எடுக்க யாரும் வரவில்லை.

தர்மபுரி: ’’ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஜப்பான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது’’-எம்.பி. செந்தில்குமார் பேட்டி

மாவட்ட நிர்வாகத்தின் கேட்டபோது 50 கிலோ அரிசி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது . அரிசியை வைத்துக் கொண்டு காய்கறி குழந்தைகளுக்கு பால் இல்லாமல் எப்படி இவர்களால் வாழ்க்கை நடத்த முடியும் . குடி தண்ணீருக்கும் பிரச்சனை உள்ளர். ஒகேனக்கல் பகுதியில் ஒரு கரையில் தமிழகபகுதியாகவும் மறுகரையில் கர்நாடகாவும் உள்ளது.

தர்மபுரி: ’’ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஜப்பான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது’’-எம்.பி. செந்தில்குமார் பேட்டி

கர்நாடகாவில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகபகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சுற்றுலா பயணிகள் அனுமதித்தால் அதனை ஏற்றுக் கொள்ள இங்கு உள்ள தொழிலாளர்கள் தயாராக உள்ளனர். பதினைந்தாம் தேதி சுற்றுலா தளம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது தற்போது வரை அனுமதி வழங்கவில்லை. திறக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொழிலாளர்களின் பிரச்சனையை மாவட்ட நிர்வாகம் இவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.ஒகேனக்கல் பகுதியில் சர்வதேச அளவிலான நீச்சல் குளம் அமைக்க வேண்டும் இதற்காக நாடாளுமன்றத்தில் தான் பேசியதாகவும் இங்குள்ள குழந்தைகள் பெரிய பாறையில் இருந்து குதித்து பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு மேலும் பயிற்சி வழங்கினால் ஒலிம்பிக் போன்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள். ஒகேனக்கல் பகுதியை மேம் படுத்த தற்போதைய ஆட்சியாளர்கள் கேட்டுக் கொள்வதாக இல்லை. நிச்சயமா ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஒகேனக்கல் சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றம் செய்யப்படும். ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஜப்பான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. அதன் மூலம் சுற்றுலா தளத்தில் முதலீடு செய்தால் இங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்’’என்று தெரிவித்தார்.