சட்டமன்ற தேர்தல் குறித்து எம்எல்ஏ இன்பசேகரன் ஆலோசனை

 

சட்டமன்ற தேர்தல் குறித்து எம்எல்ஏ இன்பசேகரன் ஆலோசனை

தர்மபுரி

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், இன்று அக்கட்சியின் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான இன்பசேகரன் தலைமையில் நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தல் குறித்து எம்எல்ஏ இன்பசேகரன் ஆலோசனை

தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய இன்பசேகரன், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான காலம் நெருங்கி கொண்டிருப்பதால், மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள், வாக்காளர்

சட்டமன்ற தேர்தல் குறித்து எம்எல்ஏ இன்பசேகரன் ஆலோசனை

பட்டியல் சரிபார்ப்பு, விடுபட்டவர்களின் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறும் அளவிற்கு, கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.