நிலப் பிரச்சினையில் தீக்குளித்த விவசாயி – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

நிலப் பிரச்சினையில் தீக்குளித்த விவசாயி –  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்  பகுதியில், நிலப் பிரச்சினையில் தீக்குளித்த விவசாயி , உயிருக்கு ஆபத்தான நிலையில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நிலப் பிரச்சினையில் தீக்குளித்த விவசாயி –  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ளது கணபதி கொட்டாய். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி(65). இவர், தன் நிலத்தின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்திலும் விவசாயம் செய்து வந்தார். அப்பகுதியில் வசிக்கும் சில குடும்பத்தினர் இந்த புறம்போக்கு நிலத்தின் வழியாக, வழிப்பாதை வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், சின்னசாமி வழிபாதை வழங்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், வழிப்பாதை இல்லாமல் சிரமப்பட்ட மக்கள் பாதை ஏற்படுத்தித் தருமாறு வருவாய்த் துறை அதிகாரிகளை அணுகி முறையிட்டு வந்தனர். 

நிலப் பிரச்சினையில் தீக்குளித்த விவசாயி –  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணிக்கு அதிகாரிகள் வந்தது முதலே, எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்து வந்த சின்னசாமி, மாலையில் திடீரென மண்ணெண்ணை கேனுடன் வந்து, தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும், உடலில் தீ பரவி அதிக அளவில் தீக்காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் பற்றி காரிமங்கலம் போலீஸார் விசாரணை நடத்ததி வருகின்றனர். – இளையராஜா