கிணற்றில் விழுந்த யானை 15 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு!

 

கிணற்றில் விழுந்த யானை 15 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு!

தருமபுரி மாவட்டம் பஞ்சபள்ளி காப்புக்காடு பகுதியில் ஏலகுண்டூர் கிராமத்தில் உணவு தேடி ஊருக்குள் நுழைந்த பெண் யானை, வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத விவசாய கிணற்றில் விழுந்தது. இன்று காலை விழுந்த யானையை 15 மணிநேரமாக மீட்கும் பணியில் பாலக்கோடு வனத்துறையினர் ஈடுபட்டனர். கிணற்றில் விழுந்த யானையை கிரேன் மூலம் மீட்பதில் சிக்கல் இருப்பதால், மயக்க ஊசி செலுத்தி மீட்க வனத்துறையினர் திட்டமிட்டனர். கிணற்றில் விழுந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கிரேன் மூலம் மீட்கும் பணி தொடர்ந்தது. கிணற்றில் 10 அடி அகலமுள்ள சிமெண்ட் வளைவில் யானை இருப்பதால், மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இருள் சுழ்ந்துவிட்ட போதிலும் தொடர்ந்து மீட்புப்படை தொடர்ந்து நடைபெற்றது.

கிணற்றில் விழுந்த யானை 15 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு!

இந்நிலையில் தருமபுரி அருகே 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை கிரேன் உதவியுடன் வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.