சுதந்திர தினத்தையொட்டி, 75 ஆயிரமாவது மரக்கன்றை நட்டுவைத்த தருமபுரி ஆட்சியர்!

 

சுதந்திர தினத்தையொட்டி, 75 ஆயிரமாவது மரக்கன்றை நட்டுவைத்த தருமபுரி ஆட்சியர்!

தருமபுரி

75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பையன அள்ளி ஊராட்சியில் நேற்று 75 ஆயிரமாவது மரக்கன்றை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி நட்டு வைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 7,500 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.

அதன் படி, நேற்று 75 ஆயிரத்து 999 செய்யப்பட்ட நிலையில், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்பையன அள்ளி ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினி கலந்துகொண்டு, 75 ஆயிரமாவது மரக்கன்றினை நட்டு வைத்தார்.

சுதந்திர தினத்தையொட்டி, 75 ஆயிரமாவது மரக்கன்றை நட்டுவைத்த தருமபுரி ஆட்சியர்!

எர்பையன அள்ளி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.29.62 லட்சம் மதிப்பீட்டில் 40 ஏக்கர் பரப்பளவில் மா, பலா, தென்னை, கொய்யா, நாவல், காட்டுநெல்லி, அத்தி, சப்போட்டா, கருவேப்பில்லை, முருங்கை,பாதாம் உள்ளிட்ட 3 ஆயிரத்து 25 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் வைத்தியநாதன், தருமபுரி உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், ஊராட்சி உதவி இயக்குநர் சீனிவாச சேகர், தருமபுரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.