Home தமிழகம் தர்மபுரி: ஒருதலைக்காதல் - இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் போச்சோவில் கைது

தர்மபுரி: ஒருதலைக்காதல் – இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் போச்சோவில் கைது

 புகைப்படத்தை  மார்பிங் செய்து வெளியிடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிறுமிக்கு தொல்லை:இளைஞா் போக்சோவில் கைது- Dinamani

தர்மபுரி அடுத்த எர்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருமால்(32). இவர் மணமானவர். தனியார் கல்லூரி ஒன்றில் ஓராண்டுக்கு முன்பு பஸ் டிரைவராக பணியாற்றி உள்ளார். அப்போது அவர் டிரைவாக இருந்த பஸ்ஸில் கல்லூரிக்கு சென்று வந்த, தர்மபுரியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். மேலும், ஒருதலையாக அந்தப் பெண்ணை அவர் காதலித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். இதையறிந்த திருமால், ’’தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உன்னுடைய போட்டோக்களை கிராபிக்ஸ் செய்து இணைய தளங்களில் வெளியிடுவேன்’’ என்று அந்த இளம்பெண்ணை  மிரட்டியுள்ளார்.

பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: 9 பேர் கைது!

இது தொடர்பாக இளம்பெண் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரித்த போலீசார், இளம்பெண்ணின் புகார் உண்மை என்பதை உறுதி செய்து, திருமாலை போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

திருப்பூரில் சிறுமி குளிக்கும் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய டெய்லர் போக்சோவில்  கைது || Tailor arrested for threatening to release video of girl bathing

மாவட்ட செய்திகள்

Most Popular

உங்களுக்கு அல்சர் பிரச்னை இருக்கா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க போதும்!

நமது உணவில் அன்றாடம் பயன்படுத்தும் முட்டைக்கோஸ், தன்னுள் மனித உடலுக்கு தேவையான பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனை, ஜூஸாக அரைத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்,...

“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!

சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்திருந்தார். அதன்படி வீடுகளுக்கு 10 ரூபாய்...

விளாத்திக்குளம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

தூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே கோவில் குமரெட்டியாபுரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். விளாத்திக்குளம் அடுத்த கோவில்...

“உறங்கியவன் தொடையில் திரித்த வரை லாபம்; சந்தடி சாக்கில் உலை வைக்கும் மோடி-எடப்பாடி”

கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள 14க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப் பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து...
TopTamilNews