• February
    27
    Thursday

Main Area

Main



யோகி பாபுவின் தர்மபிரபு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது!

யோகி பாபு
யோகி பாபு

சென்னை: நடிகர் யோகி பாபுவின் 'தர்மபிரபு' படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் நடிகர் யோகி பாபு. தனது எதார்த்தமான பேச்சு மற்றும் முகபாவனை வைத்து, இவர் செய்யும் காமெடியை பார்பதற்காவே ஒரே கூட்டம் திரையரங்கத்திற்குச் செல்கிறது. தற்போது நகைச்சுவை நடிகராக நடித்து வந்த யோகி பாபு ஹீரோவாக அவதாரம் எடுத்து நடித்த திரைப்படம் தான் தர்மபிரபு. 

dharma prabhu

இந்த படத்தை இயக்குநர் முத்துக்குமரன் இயக்கியுள்ளார். மேலும் கருணாகரன், ராதாரவி, சாம் ஜோன்ஸ், ஜனனி ஐயர், மனோபாலா, ரேகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் தற்போது படம் வெளியாகும் தேதி குறித்த அறிவுப்பு வெளியாகியுள்ளது.  அதன்படி வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக யோகி பாபு ஹீரோவாக நடத்துத்திருக்கும் இத்திரைப்படத்தைக் காண அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து இருக்கின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.