#Dharapuram ‘கலையும் சட்டமன்றக் கனவு’… எல்.முருகனை தூக்கி அடிக்கும் திமுக!

 

#Dharapuram ‘கலையும் சட்டமன்றக் கனவு’… எல்.முருகனை தூக்கி அடிக்கும் திமுக!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகள் பல, திமுகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருப்பதால் ஆளுங்கட்சியினர் ஆட்டம் கண்டுள்ளனர். பாஜக கூட்டணிக்கு அதிமுக ஒப்புக் கொண்டது தான் வெற்றி வாய்ப்புக்கு தடையாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. இப்படி இருக்கும் சூழலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தினோம். அதில், இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி தாராபுரம்.

#Dharapuram ‘கலையும் சட்டமன்றக் கனவு’… எல்.முருகனை தூக்கி அடிக்கும் திமுக!

பாஜகவின் சட்டமன்றக் கனவு:

தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒரே கட்சி பாஜக தான். வடமாநிலங்கள் அனைத்தையும் தன் வசப்படுத்தியிருக்கும் பாஜகவால், தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைய முடியவில்லை. மத்திய பாஜக அரசின் திட்டங்கள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். சட்டமன்றத்துக்குள் ஒரு எம்.எல்.ஏவையாவது அனுப்பிட வேண்டுமென கனவு காணும் பாஜக, ஆளுங்கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

#Dharapuram ‘கலையும் சட்டமன்றக் கனவு’… எல்.முருகனை தூக்கி அடிக்கும் திமுக!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் பாஜக தலைவர்களும் நட்சத்திர பேச்சாளர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த 20 தொகுதிகளுள் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பது 3 தொகுதிகளில் தான். அவை ஆயிரம் விளக்கு, தாராபுரம், கோவை தெற்கு. ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு திமுகவுடன் நேரடியாக களம் காணுகிறார். கோவை தெற்கில் வானதி சீனிவாசனை எதிர்த்து கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதனால் இந்த 2 தொகுதிகளிலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு தான் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

இதனடிப்படையில் பார்த்தால், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன் மட்டுமே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை வெற்றி பெறவைக்க பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார். பிரதமரே நேரில் வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு இருக்கிறது தமிழகத்தில் பாஜகவின் நிலைமை..

#Dharapuram ‘கலையும் சட்டமன்றக் கனவு’… எல்.முருகனை தூக்கி அடிக்கும் திமுக!

பாஜக vs திமுக:

கடந்த 30 ஆண்டுகாலத்தில் தாராபுரம் தொகுதியில் அதிமுக 2 முறையும் திமுக 2 முறையும் காங்கிரஸ், பாமக ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ காங்கிரஸை சேர்ந்த காளிமுத்து. இந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுகவில் இருந்து கயல்விழி ஆனந்தன் போட்டியிடுகிறார்.

#Dharapuram ‘கலையும் சட்டமன்றக் கனவு’… எல்.முருகனை தூக்கி அடிக்கும் திமுக!

ஆளப்போவது யார்?

தாராபுரம் சட்டமன்றம் தொகுதியில் இதுவரை அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மாறி மாறி ஆட்சி புரிந்துள்ள நிலையில் தற்போது எல்.முருகன் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாக மாறியிருக்கிறது. இது அங்கு வசிக்கும் மக்களுக்கே ஆச்சரியமூட்டும் விஷயமாக இருக்கிறது. இதனால் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதா? அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதா? என மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

#Dharapuram ‘கலையும் சட்டமன்றக் கனவு’… எல்.முருகனை தூக்கி அடிக்கும் திமுக!

இந்த தொகுதி, விவசாயம் அதிகமாக நடக்கும் தொகுதி என்பதால் விவசாயம் சார்ந்த கட்டமைப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தி தரவில்லை என்றும் மருத்துவம் மற்றும் சாலை வசதிகளை அதிகப்படுத்தி தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கையை முன்வைத்தனர். கலைக்கல்லூரியை கொண்டு வர வேண்டும் என்றும் மக்கள் கூறினர்.

சர்வேயின் முடிவில், பாஜக – திமுகவுக்கு இடையே கடும் போட்டி இருந்தாலும் கூட திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, எல்.முருகன் தாராபுரத்தில் வெற்றி பெற வாய்ப்பு குறைவு தான் என்பதே நமது கணிப்பு. இது தேர்தலில் பிரதிபலிக்கிறதா? பாஜகவின் சட்டமன்றக் கனவு பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…!