கொரோனாவல் காவல் துறை இறப்பதை குறைத்த டெல்லியின் சூப்பர் திட்டம்

 

கொரோனாவல் காவல் துறை இறப்பதை குறைத்த டெல்லியின் சூப்பர் திட்டம்

நேற்று மட்டும் அமெரிக்காவில், 1,358 பேரும், பிரேசில் நாட்டில் 1,365 பேரும், இந்தியாவில் 1,089 பேரும் நேற்றைக்கு மட்டும் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் பொதுமக்கள் இறப்பதைப் போல, களத்தில் நிற்கும் மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளார்களின் இறப்பும் அதிகரித்து வருகிறது.

கொரோனாவல் காவல் துறை இறப்பதை குறைத்த டெல்லியின் சூப்பர் திட்டம்

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றில் தொடக்கம் முதலே டெல்லி பாதிப்பின் முதல் மூன்று இடங்களில் இருக்கிறது. எனவே அங்கு காவல் துறையினரைக் காக்க அம்மாநில அரசு கையில் எடுத்த திட்டம்தான் தன்வந்தரி ராத்.

டெல்லி காவல்துறையின் குடியிருப்புப் பகுதிகளில் ஆயுர்வேதத் தடுப்பு மற்றும் ஊக்குவிப்பு சுகாதாரச் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) மற்றும் டெல்லி காவல்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

கொரோனாவல் காவல் துறை இறப்பதை குறைத்த டெல்லியின் சூப்பர் திட்டம்

இந்தச் சேவைகள் ‘தன்வந்தரி ராத்’ மற்றும் போலிஸ் ஆரோக்கிய மையங்கள் என்ற மொபைல் பிரிவு மூலம் வழங்கப்பட உள்ளதுடன், ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தால் (AIIA) வழங்கப்பட உள்ளது.

ஆயுஷ் மற்றும் தில்லி காவல்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமான, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் (AIIA) கூட்டு முயற்சியான ஆயுரக்க்ஷா, ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நடவடிக்கைகள் மூலம் டெல்லி போலீஸ் போன்ற முன்னணி கோவிட் செயல் வீரர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கொரோனாவல் காவல் துறை இறப்பதை குறைத்த டெல்லியின் சூப்பர் திட்டம்

இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக, ஆயுர்வேதத் தடுப்பு மற்றும் ஊக்குவிப்பு சுகாதாரப் பராமரிப்பு இப்போது டெல்லி காவல்துறையினரின் குடும்பங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

2 மாத காலப்பகுதியில் கிட்டத்தட்ட 80,000 காவல் துறையினருக்கு, ஆயுராக்ஷா கிட்களை விநியோகித்த பின்னர், டெல்லி காவல்துறையினரில் கோவிட்-19 இன் இறப்பு விகிதமும், நோய்த் தொற்றால் பாதிப்பும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.