• August
    25
    Sunday

Main Area

Main



ரஜினியின் கோரிக்கையை ஏற்க மறுத்த கார்த்திக் சுப்புராஜ்...கன்ஃபர்ம் ஆன தனுஷ் படம்...

கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ்
Loading...

தனது இளைய மருமகன் விசாகனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கித்தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினி வைத்த கோரிக்கையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிராகரித்துள்ளார். அவரும் தனுஷும் இணைய உள்ள பட அறிவிப்பு மிக விரைவில் வெளியாகிறது.

தனது இளையமகள் சவுந்தர்யாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட விசாகன் சினிமாவில் ஒரு நல்ல சான்ஸ் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில் தன்னைவைத்து ‘பேட்ட’படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜிடம் ரஜினி ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி தனுஷுடன் கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்துக்கு முன்பாக விசாகனை வைத்து இயக்குவதாக ஒரு திட்டம் இருந்தது.

ஆனால் தனக்கு வரிசையாக படங்கள் இருப்பதால் இந்த ஆகஸ்டில்  சொன்ன தேதிகளைப் பயன்படுத்தாவிட்டால் மாரிசெல்வராஜ், செல்வராகவன்,கே.வி.ஆனந்த் என்ற பெரிய கியூ நிற்பதால் தன்னால் அடுத்து எப்போது கால்ஷீட் தரமுடியும் என்பதே தெரியாது என்று சொன்னதாகத் தெரிகிறது. இதனால் உஷாரான கார்த்திக் சுப்பாராஜ்,’நான் முதல்ல உங்க படத்தை முடிச்சுட்டு அப்புறம் விசாகனை வச்சுப் பண்ணிக்கிறேன். அவரு வீட்ல் சும்மாதான இருக்காரு. அப்பிடியே இன்னும் ஒரு ஒரு வருஷம் இருக்கட்டும்’என்று தனுஷ் பக்கம் தலை தெறிக்க ஓடிவந்துவிட்டாராம்.

2018 TopTamilNews. All rights reserved.