உயிரை பணயம் வைத்து குற்றவாளியை பிடித்த காவலருக்கு… இன்ப அதிர்ச்சி கொடுத்த டிஜிபி!

 

உயிரை பணயம் வைத்து குற்றவாளியை பிடித்த காவலருக்கு… இன்ப அதிர்ச்சி கொடுத்த டிஜிபி!

திருச்சி அருகே உயிரை பணயம் வைத்து குற்றவாளியை பிடித்த காவலருக்கு பரிசுத்தொகை வழங்கப்படுமென டிஜிபி அறிவித்துள்ளார்.

திருச்சி சென்னை பைபாஸில் காரில் 21 கிலோ கஞ்சா கடத்தப்படுவதாக மாநகர தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்ற போலீசார் மன்னார்புரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்துள்ளது. அந்த காரை பைக்கில் விரட்டிச் சென்ற போலீசார் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் கார் படுவேகமாக சென்று கொண்டிருந்ததால் தனிப்படை போலீஸ் ஏட்டு சரவணன் பைக்கிலிருந்து எகிறி குதித்து காரின் பேனட்டை பிடித்துக் கொண்டுள்ளார்.

உயிரை பணயம் வைத்து குற்றவாளியை பிடித்த காவலருக்கு… இன்ப அதிர்ச்சி கொடுத்த டிஜிபி!
y s

எனினும், அந்த நபர் காரை நிறுத்தவில்லை. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பேனட்டை பிடித்தபடியே பயணித்த சரவணன் ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்து வளைத்துள்ளார். அப்போது கார் எதிரிலிருந்த தடுப்பு கட்டையில் மோதி நின்றுள்ளது. அப்போது தூக்கி வீசப்பட்ட சரவணனுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சரவணனின் இந்த அசாதுரியமான முயற்சியால் குற்றவாளி பிடிபட்டார். அவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவலர் சரவணனின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.