”டிஸ்பென்சர் பம்புடன் கூடிய சானிடைசர் ஏற்றுமதிக்கு அனுமதி”- மத்திய அரசு அதிரடி!

”டிஸ்பென்சர் பம்புடன் கூடிய சானிடைசர் ஏற்றுமதிக்கு அனுமதி”- மத்திய அரசு அதிரடி!

டிஸ்பென்சர் பம்புடன் கூடிய சானிடைசர் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை மத்திய அரசு நீக்கி உள்ளது.

”டிஸ்பென்சர் பம்புடன் கூடிய சானிடைசர் ஏற்றுமதிக்கு அனுமதி”- மத்திய அரசு அதிரடி!

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடெங்கிலும் சானிடைசர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு, அல்கஹால் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. பின்னர் உள்நாட்டு தேவைக்கு அதிகமாக சானிடைசர்கள் உற்பத்தி நடைபெற்றதை அடுத்து, அவற்றிற்கான ஏற்றுமதிக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது. எனினும், டிஸ்பென்சர் பம்புடன் கூடிய சானிடைசர்கள் ஏற்றுமதிக்கு மட்டும் தடை தொடரும் என தெளிவாக அந்த உத்தரவில் அரசு தெரிவித்து இருந்தது.

”டிஸ்பென்சர் பம்புடன் கூடிய சானிடைசர் ஏற்றுமதிக்கு அனுமதி”- மத்திய அரசு அதிரடி!

இந்நிலையில், தற்போது டிஸ்பென்சர் பம்புடன் கூடிய சானிடைசர்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை மத்திய அரசு விலக்கி உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அனைத்து வகை சானிடைசர்களின் ஏற்றுமதிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவல் காரணமாக சானிடைசர்களுக்கு மட்டுமின்றி, ஸ்பிரே பம்புகளுக்கும் நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் இப்போது தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டுவிட்டதால், டிஸ்பென்சர் பம்புடன் கூடிய சானிடைசர்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

”டிஸ்பென்சர் பம்புடன் கூடிய சானிடைசர் ஏற்றுமதிக்கு அனுமதி”- மத்திய அரசு அதிரடி!

சர்வதேச சந்தையில் சானிடைசர்களை டிஸ்பென்சர் பம்புகளுடன் வாங்குவதயே பெரும்பாலும் விரும்புவதால், சானிடைசர்கள் ஏற்றுமதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், அரசின் இந்த அறிவிப்பு ஏற்றுமதியாளர்களுக்கு இழந்த தங்கள் விற்பனையை திரும்ப பெற நல்வாய்ப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்