இந்த வாரத் திருவிழாக்கள்... நவம்பர் 22 முதல் 28 வரை!

 
kalbhairav

நவம்பர் 22 முதல் 28ம் தேதி வரையிலான ஒரு வாரத்திற்கான சுப முகூர்த்த நாட்கள், விழாக்கள், முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பைக் காண்போம்!

22 நவம்பர் 2021

கார்த்திகை 6, திங்கட்கிழமை. தேய்பிறை. கரிநாள். திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

சந்திராஷ்டமம்: கேட்டை

23 நவம்பர் 2021, செவ்வாய்க்கிழமை:

கார்த்திகை 7, சங்கடஹர சதுர்த்தி, புட்டபர்த்தி சாய்பாபா பிறந்த நாள் விழா.

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்.

24 நவம்பர் 2021, புதன் கிழமை:

கார்த்திகை 8, சுப முகூர்த்த தினம். வாஸ்து தினம். பகல் 11.29 முதல் பகல் 12.05 வரை வீடு, மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய ஏற்ற நேரம்.

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

25 நவம்பர் 2021, வியாழக்கிழமை:

கார்த்திகை 9, சுபமுகூர்த்த தினம்.

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

26 நவம்பர் 2021, வெள்ளிக்கிழமை:

கார்த்திகை 10, கரிநாள். சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

27 நவம்பர் 2021, சனிக்கிழமை:

கார்த்திகை 11, ஶ்ரீகால பைரவர் ஜெயந்தி. குச்சனூர் சனீஸ்வர பகவான் ஆராதனை.

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

28 நவம்பர் 2021, ஞாயிற்றுக்கிழமை:

கார்த்திகை 12, சூரிய வழிபாடு தினம். கிறிஸ்தவர்களுக்கு: இயேசு கிறிஸ்து பிறப்பு காலம் (அட்வென்ட்) முதல் ஞாயிறு.

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.