இந்த வாரத் திருவிழாக்கள்... நவம்பர் 15 முதல் 21 வரை!

 
கார்த்திகை தீபம்

நவம்பர் 15ம் தேதி (திங்கட்கிழமை) முதல் நவம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு வாரக் காலத்தில் வர உள்ள சிறப்பு நாட்கள், சுப முகூர்த்தங்கள், சந்திராஷ்டமம், திருவிழாக்கள் பற்றிய தொகுப்பைப் பார்ப்போம்.

நவம்பர் 15, 2021 (திங்கட்கிழமை):

சுப முகூர்த்தம், ஸர்வ ஏகாதசி, சுவாமிமலை முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு. மயிலாடுதுறை கௌரி மாயூரநாதர் ரதோற்சவம். சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

நவம்பர் 16, 2021 (செவ்வாய்க்கிழமை):

பிரதோஷம். துவாதசி.

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

நவம்பர் 17, 2021 (புதன் கிழமை)

கார்த்திகை மாதம் பிறப்பு. கரிநாள்.

ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா.

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

நவம்பர் 18, 2021 (வியாழக்கிழமை):

சதுர்த்தசி. பௌர்ணமி. பரணி தீபம், கார்த்திகை கெளரி விரதம்.

சந்திராஷ்டமம்: சித்திரை

நவம்பர் 19, 2021 (வெள்ளிக்கிழமை):

திருக்கார்த்திகை தீபம். திருவண்ணாமலை ஶ்ரீஅருணாச்சலஸ்வரர் கோவில் ஜோதி தரிசனம்.

சந்திராஷ்டமம்: சுவாதி

நவம்பர் 20, 2021 (சனிக்கிழமை):

ஶ்ரீபாஞ்சராத்திர தீபம்.

சந்திராஷ்டமம்: விசாகம்

நவம்பர் 21, 2021 (ஞாயிற்றுக்கிழமை):

சுபமுகூர்த்த நாள்.

சந்திராஷ்டமம்: அனுஷம்.