சபரி மலைக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

 
Ayyapan

இன்று கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. ஐயனைத் தரிசிக்க ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள் மாலை அணியத் தயாராகியிருப்பார்கள். சபரி மலைக்கு மாலை அணிவிக்கும் பக்தர்கள் முதலில் முழு முதற் கடவுளான விநாயகரை வணங்க வேண்டும். அதன் பிறகு, ஐயப்பனை மனதில் நினைத்து அவருக்கான மந்திரத்தைச் சொல்லி மிகவும் பக்தியுடன் மாலையை அணிந்துகொள்ள வேண்டும். 41 அல்லது 45 அல்லது 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்குச் சென்று வர வேண்டும்.

முதலில் சொல்ல வேண்டிய விநாயகர் ஸ்லோகம்...

மகா கணபதி தியான ஸ்லோகம்

மூஷக வாஹந மோதக ஹஸ்த

சாமர கர்ண விலம்பித ஸுத்ர

வாமந ரூப மஹேச்வர புத்ர

விக்ந விநாயக பாத நமஸ்தே

மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்...

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்

வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்

சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்

சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ

குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே

சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்

சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்

சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம:

தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் காயத்ரி மந்திரம்:

ஓம் பூதநாதாய வித்மஹே

பவநந்தனாய தீமஹி

தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்