கொரோனாவை ஒழிக்க நடந்த மத ஊர்வலம்.. நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு.. 23 பேர் கைது

 

கொரோனாவை ஒழிக்க நடந்த மத ஊர்வலம்.. நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு.. 23 பேர் கைது

குஜராத்தில் கொரோனாவை ஒழிப்பதற்காக நடந்த மத ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே தேவையில்லாமல் வரக்கூடாது, வெளியே வரும்பட்சத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

கொரோனாவை ஒழிக்க நடந்த மத ஊர்வலம்.. நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு.. 23 பேர் கைது
ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள்

குஜராத்தில் அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் தாலுகாவில் உள்ள நவபுரா கிராமத்தில் நடந்த மத ஊர்வலத்தில் அப்பட்டமாக கோவிட் நெறிமுறைகள் காட்டில் பறக்கவிடப்பட்டது. நவபுரா கிராமத்தினர் அங்குள்ள பைல்யதேவ் கோயிலின் கலசத்தில் தண்ணீர் ஊற்றினால் கொரோனா வைரஸ் ஒழிந்து விடும் நம்பினர். இதனையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தண்ணீர் பானைகளை சுமந்தபடி ஊர்வலமாக கோயில் வந்து அடைந்தனர். அந்த பானைகளில் உள்ள தண்ணீரை கோயிலின் கலசத்தில் சிலர் ஊற்றினர். இது குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தலைவர் உள்பட 23 பேரை கைது செய்தனர்.

கொரோனாவை ஒழிக்க நடந்த மத ஊர்வலம்.. நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு.. 23 பேர் கைது
கைது

இது தொடர்பாக சனந்த் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கே.டி. கமரியா கூறுகையில், ஏராளமான பெண்கள் தண்ணீர் பானைகளை சுமந்து ஊர்வலமாக சென்றனர். சம்பவம் நடந்த அன்றே போலீஸ் குழு அங்கு சென்ற போலீசார், விழாவை ஏற்பாடு செய்த தலைவர் கபாபாய் தாகூர் உள்பட 23 கிராம மக்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய தண்டனை சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் தொற்றுநோய் சட்டத்தின் 118வது பிரிவின் கீழ் பொதுக்கூட்டங்கள் தொடர்பான காவல்துறை அறிவிப்பை மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.