கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராடல்!

 

கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராடல்!

மாசி மக பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தின் கிழக்கு மற்றும் மேல் கரைகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராடல்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமக பெருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாமக திருவிழாவில் ஆதிகும்பேஸ்வரர்,காசி விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர் என 6 சிவன் கோவில்களில் இந்த மகாமாசிமகத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய பெருமாள் கோவில்களிலும் கடந்த 18ம் தேதி மாசிமகவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.அத்துடன் இக்கோவில்களில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். காசிவிசுவநாதர் ,அபிமுகேஸ்வரர் ,கௌதமேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் உள்ள உற்சவர்கள் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சியளித்தனர். இன்று காலை 8 மணிக்கு சக்கரபாணி சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராடல்!

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மாசி மகத்தை ஒட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல் செய்தனர். மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ள நிலையில் குளத்தில் இறங்காமல் படிகளில் அமர்ந்து பக்தர்கள் நீராடினர். மாசிமக விழாவின் முக்கிய நிகழ்வான 12 சிவாலயங்களிலும் இருந்தும் சுவாமி மற்றும் அம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு குளக்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்யும் நிகழ்ச்சி இன்று 12 மணிக்கு நடைபெறுகிறது . இதனால் கொரோனா குறைந்து வருவதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குளத்திற்கு அருகில் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 32 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.