ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் நாட்களில் தரிசனத்துக்கு தடை!

 

ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் நாட்களில் தரிசனத்துக்கு தடை!

நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் நாட்களில் தரிசனத்துக்கு தடை!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் வருகின்ற 9ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிக அளவில் பொது மக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி ,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது என கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் நாட்களில் தரிசனத்துக்கு தடை!

இந்நிலையில் தமிழகத்தில் ஆடி அமாவாசை (நாளை) ஆடிப்பூரம் (ஆகஸ்ட் 11)நாட்களில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையான நாளை கோயில்களில் பக்தர்கள் வழிபட அனுமதியில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்கள் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் நாட்களில் ஆகம விதிப்படி கோவில்களில் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.