மதுரை மீனாட்சி கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி

 

மதுரை மீனாட்சி கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் மிக முக்கியமான திருவிழா மதுரைச் சித்திரைத் திருவிழா.இதனையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் பனிரெண்டு நாட்களுக்கு அமர்க்களப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வரும் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. அதிலிருந்து 10-ம் நாள் மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா நடைபெறும்.

மதுரை மீனாட்சி கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி

இந்நிலையில் கொரோனா பரவல் வரும் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சுவாமி புறப்பாடு நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை கண்டுகளிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்வை காணலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.