திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதி!

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதி!

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 25-ந் தேதி பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது.

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதி!

இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதில், வழக்கம்போல் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முகக் கவசம், சமூகஇடைவெளி, கையுறை போன்றவை கட்டாயமாக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதி!

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு கல்யாண உற்சவம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.