நாடாளுமன்றத்தில் தேவேந்திரகுல வேளாளர் மசோதா தாக்கல்

 

நாடாளுமன்றத்தில் தேவேந்திரகுல வேளாளர் மசோதா தாக்கல்

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள ஏழு சாதியினரை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கான சட்டமசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திரகுலத்தான், காலாடி, பள்ளன் உள்ளிட்ட சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே பெயரில் பொது பெயரிடக்கோரி பல்வேறு கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் தேதி முதல் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மாவை தலைவராக கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது.

நாடாளுமன்றத்தில் தேவேந்திரகுல வேளாளர் மசோதா தாக்கல்

இந்த குழுவின்பரிந்துரையின் படி தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொது பெயரிட மாநில அரசின் பரிந்துரை மீது மத்திய அரசின் ஆணை பெற தமிழக அரசு அனுப்பியது. இந்த சூழலில் பட்டியல் இன உட்பிரிவுகளை சார்ந்த 7 சாதியினரை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயரிட நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மசோதா தாக்கல் செய்துள்ளது.