தேவேந்திர குல வேளாளர்… வழக்கு தள்ளுபடி!

 

தேவேந்திர குல வேளாளர்… வழக்கு தள்ளுபடி!

தமிழகத்தில் பள்ளர், கடையர், காலாடி உள்ளிட்ட 7 பிரிவுகளை சேர்ந்த மக்களை ‘தேவேந்திர குல வேளாளர்‘ என ஒரே பெயரில் அழைக்கவேண்டும் என்பது பல ஆண்டு கால கோரிக்கையாக இருந்தது. இக்கோரிக்கை அண்மையில் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது தேவேந்திர குல வேளாளர் பிரிவு மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

தேவேந்திர குல வேளாளர்… வழக்கு தள்ளுபடி!

இந்த நிலையில், தேவேந்திர குல வேளாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரை சேர்ந்த கார்வேந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்திருந்த மனுவில், தேவேந்திர குல வேளாளர் சட்டம் இயற்றப்பட்ட போது தமிழகத்தை சேர்ந்த ஒரு எம்.பி கூட இல்லை என்றும் அரசியல் லாபத்துக்காக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இச்சட்டத்துக்கு ஏற்கனவே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து விட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், கார்வேந்தன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.