உண்மை தெரியுணும்ன்னா பரிசோதனையை அதிகப்படுத்துங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கடிதம்

உண்மை தெரியுணும்ன்னா பரிசோதனையை அதிகப்படுத்துங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கடிதம்

மும்பையில் கோவிட்-19 பரிசோதனையை அதிகப்படுத்தப்படுத்த வேண்டும் அப்போதுதான், நோய் பரவலின் உண்மையான நிலவரம் தெரியும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் தொடர்பாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு 10 கடிதங்கள் எழுதியுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனை தொடர்பாக மேலும் ஒரு கடிதத்தை உத்தவ் தாக்கரேவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் அனுப்பியுள்ளார்.

உண்மை தெரியுணும்ன்னா பரிசோதனையை அதிகப்படுத்துங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கடிதம்
தேவேந்திர பட்னாவிஸ்

உத்தவ் தாக்கரேவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் அனுப்பிய கடிதத்தில், மும்பையில் கடந்த ஜூலை மாதத்தில் நாள்தோறும் 6,574 கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இது ஆகஸ்டில் 7,709ஆக உயர்ந்தது. அதாவது கடந்த ஆகஸ்டில் தினசரி கெரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கை 14 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆகையால் நகரில் குறைந்த அளவே கொரோனா வழக்குகள் பதிவாகின.

உண்மை தெரியுணும்ன்னா பரிசோதனையை அதிகப்படுத்துங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கடிதம்
கோவிட்-19 பரிசோதனை

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடந்த ஜூலையில் தினந்தோறும் 37,528 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் நடைபெற்றது. இது ஆகஸ்டில் 64,801ஆக உயர்ந்தது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 42 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே மும்பையில் கொரோனா வைரஸ் பரவலின் உண்மையான நிலவரத்தை தெரிந்து கொள்ள நகரத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.