மற்ற மாநிலங்கள் திட்டங்களை கூறி நிதி பெறுகின்றன.. மகாராஷ்டிரா ஒரு திட்டத்தை கூட அனுப்பவில்லை.. பட்னாவிஸ்

மற்ற மாநிலங்கள் திட்டங்களை கூறி நிதி பெறுகின்றன.. மகாராஷ்டிரா ஒரு திட்டத்தை கூட அனுப்பவில்லை.. பட்னாவிஸ்

மற்ற மாநிலங்கள் தங்களது கிராம சாலை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசிடம் நிதி பெறும் வேளையில், மகாராஷ்டிரா அரசு கிராம சாலை கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை கூட மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டியுள்ளார்.

மற்ற மாநிலங்கள் திட்டங்களை கூறி நிதி பெறுகின்றன.. மகாராஷ்டிரா ஒரு திட்டத்தை கூட அனுப்பவில்லை.. பட்னாவிஸ்

முன்னாள் முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலங்களின் பரிந்துரைகளை ஏற்று 17 ஆயிரம் கி.மீட்டர் கிராம சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிதியையும் மத்திய அரசு அளிக்க உள்ளது. துரதிருஷ்டவசமாக மகாராஷ்டிரா மிகவும் பின்தங்கியுள்ளதாக தெரிகிறது. முதல்வர் உடனடியாக ஆய்வு கூட்டத்தை கூட்டி மத்திய அரசின் பரிசீலனைக்காக ஒரு உறுதியான ஒரு முன்மொழிவை வைக்க வேண்டும்.

மற்ற மாநிலங்கள் திட்டங்களை கூறி நிதி பெறுகின்றன.. மகாராஷ்டிரா ஒரு திட்டத்தை கூட அனுப்பவில்லை.. பட்னாவிஸ்

பிரதமர் கிராம சாலை திட்டத்தின் 3வது கட்டத்தின்கீழ் மகாராஷ்டிராவில் 6,550 கி.மீ. கிராம சாலைகள் வர உள்ளது. கடந்த ஜனவரியில் இந்த திட்டடத்தின்கீழ், பரிந்துரைகளை அனுப்பும்படி அனைத்து மாநிலங்களிடம் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் மகாராஷ்டிரா எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இன்று மாநிலம் தொற்றுநோயை எதிர்கொள்ளும் வேளையில், இந்த திட்டம் (பிரதமர் கிராம சாலை திட்டம்) கிராமப்புறங்களில் அதிக வேலைவாய்ப்புகளுக்கு உதவக்கூடும். 3 கட்சிகள் கூட்டணி அரசு எந்தவித அவசரமும் காட்டவில்லை, மக்களுக்கு அவர்களின் வாழ்வாதார உரிமையை பறிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.