உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு கவிழும்… தேவேந்திர பட்னாவிஸ்

 

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு கவிழும்… தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பீகார் சட்டப்பேரவை தேர்தல் பா.ஜ.க. பொறுப்பாளருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பீகார் மக்கள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.மக்கள் மோடிஜிக்கு வாக்களித்தனர். நிதிஷ் குமாரின் சுத்தமான இமேஜியும் எங்களுக்கு உதவியது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு கவிழும்… தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் அதிகார மாற்றத்தை பொறுத்தவரை நாங்கள் அதை கவனிக்கவில்லை. மகாராஷ்டிராவில் உள்ள இந்த அரசாங்கம் அதன் சுமை காரணமாக ஒருநாள் உடைந்து விடும். இத்தகைய அரசாங்கங்கள் இயங்குவதில்லை. அது உடையும் நாளில் நாங்கள் மாற்று அரசாங்கத்தை வழங்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு கவிழும்… தேவேந்திர பட்னாவிஸ்
பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார்

பீகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அம்மாநில பா.ஜ.க.வுக்கு தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸை கட்சி தலைமை நியமனம் செய்தது. பீகாரில் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தேவேந்திர பட்னாவிஸூக்கு எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தேர்தல் பணிகளிலிருந்து ஒதுங்கி கொரோனா சிகிச்சைக்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.