ஒரு நாள் கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்…. ஸ்வீட் கடை விவகாரம் குறித்து தேவேந்திர பட்னாவிஸ்

ஒரு நாள் கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்…. ஸ்வீட் கடை விவகாரம் குறித்து தேவேந்திர பட்னாவிஸ்

ஒரு நாள் கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பையின் பந்த்ராவில் கடந்த 60 ஆண்டுகளாக கராச்சி என்ற ஸ்வீட் கடை செயல்பட்டு வருகிறது. கராச்சி என்ற பெயரை மாற்றக்கோரி அந்த ஸ்வீட் கடை உரிமையாளரிடம் சிவ சேனாவின் பிரபல தலைவர்களில் ஒருவரான நிதின் நந்த்கோங்கர் உத்தரவிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து கடையின் பெயரை மாற்ற சொல்வது சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இல்லை என்று சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் விளக்கம் அளித்தார்.

ஒரு நாள் கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்…. ஸ்வீட் கடை விவகாரம் குறித்து தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸிடம், கராச்சி ஸ்வீட் கடை பெயர் மாற்றம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தேவேந்திர பட்னாவிஸ், நாங்கள் ஐக்கிய (பிரிக்கப்படாத) இந்தியா மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு நாள் கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று பதில் அளித்தார். பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்பதைதான் அவர் மறைமுகமாக கூறியதாக தெரிகிறது.

ஒரு நாள் கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்…. ஸ்வீட் கடை விவகாரம் குறித்து தேவேந்திர பட்னாவிஸ்
ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டரில், கில்கிட்-பல்டிஸ்தான் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்போது அதை ஒரு மாநிலமாக மாற்றப்போகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பபு முதல் கில்கிட்-பல்திஸ்தான் வரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று எங்கள் (இந்திய) அரசாங்கம் இரண்டு வார்த்தைகளில் கூறியுள்ளது என்று பதிவு செய்து இருந்தார்.