உத்தவ் தாக்கரே அரசு அதன் சுமை காரணமாகவே கவிழும்.. நாங்க கவிழ்க்க முயற்சிக்கவில்லை….பா.ஜ.க.

 

உத்தவ் தாக்கரே அரசு அதன் சுமை காரணமாகவே கவிழும்.. நாங்க கவிழ்க்க முயற்சிக்கவில்லை….பா.ஜ.க.

மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணி அரசு நடைபெறுகிறது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடியை உத்தவ் தாக்கரே அரசு தவறாக கையாளுகிறது என எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டி ஒன்றில், மகாராஷ்டிரா அரசை ஆதரிக்க மட்டுமே செய்கிறோம். ஆட்சியை நடத்துவதில் முக்கிய பங்காற்றவில்லை. காங்கிரஸ் கட்சி தனது சொந்த அரசாங்கத்தை நடத்தும் இடத்தில் சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே அரசு அதன் சுமை காரணமாகவே கவிழும்.. நாங்க கவிழ்க்க முயற்சிக்கவில்லை….பா.ஜ.க.

இதனால் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்குள் விரிசல் விழுந்தது போல் தெரிகிறது. இதற்கிடையே அரசை பா.ஜ.க. கவிழ்க்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதனை முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் வாயிலான செய்தியாளர்கள் சந்திப்பின்போது தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: யாரும் அரசை பலகீனமாக முயற்சிக்கவில்லை, அது தனது சொந்த சுமை காரணமாகவே கவிழும். நாங்கள் அரசை கவிழ்க்க முயற்சிக்கவில்லை. கோவிட்-19 நிலவரம் மிகவும் தீவிரமாக உள்ளநிலையில் அரசை மாற்ற நாங்கள் விரும்பவில்லை. நாம் கொரோனா வைரசுக்கு எதிராக போராடுகிறோம் மற்றும் அதற்காகவே அரசுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம்.

உத்தவ் தாக்கரே அரசு அதன் சுமை காரணமாகவே கவிழும்.. நாங்க கவிழ்க்க முயற்சிக்கவில்லை….பா.ஜ.க.

மத்திய அரசு வழங்கிய நிதி உதவியை மாநில அரசு இன்னும் செலவிடவில்லை. மாநில அரசின் முன்னுரிமை என்னது என்று என்னால் உண்மையில் புரிந்து கொள்ளமுடியவில்லை. இன்று மாநிலத்துக்கு உறுதியான தலைமை தேவை. உத்தவ் ஜி துணிச்சலான முடிவுகளை எடுப்பார் என நான் எதிர்பார்க்கிறேன். மத்திய அரசு எதுவும் கொடுக்கவில்லை என மாநில அரசு கூறுகிறது ஆகையால் மத்திய அரசு என்ன கொடுத்தது என நான் சொல்கிறேன். கொரோனா வைரஸ் மத்தியில் பெண்கள், விதவைகள், மாற்று திறனாளிகள் மற்றும் இதர மக்களுக்கு இதுவரை அவர்களது வங்கி கணக்கில் மொத்தம் ரூ.3,800 கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது. 600 ஷார்மிக் ரயில்கள் மகாராஷ்டிராவிலிருந்து சென்றுள்ளன. இதற்காக மத்திய அரசு ரூ.50 லட்சம் செலவிட்டுள்ளது. ஆனால் மாநில அரசு ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை மட்டுமே செலவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.