நீங்கள் மதுபான கடைகளை திறந்திருந்தால், ஜிம்களை ஏன் அனுமதிக்கக் கூடாது.. தேவேந்திர பட்னாவிஸ்

நீங்கள் மதுபான கடைகளை திறந்திருந்தால், ஜிம்களை ஏன் அனுமதிக்கக் கூடாது.. தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி அரசு இம்மாதம் 31ம் தேதி வரை லாக்டவுனை நீட்டித்துள்ளது. அதேசமயம் கடந்த மே மாதம் கோவிட்-19 கட்டுப்படுத்துதல் இல்லாத மண்டலங்களில் மதுபானம் உள்ளிட்ட அத்தியாவசமற்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளித்தது. ஆனால் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை.

நீங்கள் மதுபான கடைகளை திறந்திருந்தால், ஜிம்களை ஏன் அனுமதிக்கக் கூடாது.. தேவேந்திர பட்னாவிஸ்

தற்போது உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்காதது குறித்து பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நீங்கள் மதுபான கடைகளை திறந்திருந்தால், உடற்பயிற்சி கூடங்களை ஏன் அனுமதிக்கக்கூடாது.

நீங்கள் மதுபான கடைகளை திறந்திருந்தால், ஜிம்களை ஏன் அனுமதிக்கக் கூடாது.. தேவேந்திர பட்னாவிஸ்

மாநிலத்தின் நிதி நிலைமை முக்கியம் ஆனால் இந்த நேரத்தில் உடல் நலம் மிகவும் முக்கியமானது என அதில் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய நிலவரப்படி, மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.48 லட்சத்தை தாண்டி விட்டது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.