தேவர் குருபூஜை : மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

 

தேவர் குருபூஜை : மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று (30 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். அத்துடன் மதுரை கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெறும்.

தேவர் குருபூஜை : மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

இந்நிலையில் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை நகர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்கள் மதுரை நகர் பகுதிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் தெரிவித்துள்ளது. அத்துடன் காவல்துறையினரால் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே தேவர் சிலையை நோக்கி செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவர் குருபூஜை : மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.