வெயில் சுட்டெரிக்குதா? இந்த ட்ரிங்க்ஸை குடிச்சு பாருங்க.. புத்துணர்ச்சியோட இருப்பீங்க!

வெயில் சுட்டெரிக்குதா? இந்த ட்ரிங்க்ஸை குடிச்சு பாருங்க.. புத்துணர்ச்சியோட இருப்பீங்க!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், வெயிலும் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. சாப்பாடே வேணாம் பா.. தண்ணி, ஜூஸ் இருந்தா போதும் என்ற நிலைமையில் தான் இப்போது மக்கள் இருக்கிறார்கள். பொதுவாக கோடைகாலத்தில் நம் உடலுக்கு அதிக நீர் சத்து தேவைப்படும். அதையே.. சற்று கூலிங்கா சத்தோட குடிச்சா சூப்பரா இருக்கும்ல.. சம்மர் சீசனில் நீங்கள் விரும்பும் சுவையிலேயே எப்படி வித விதமாக ஜூஸ் தயாரிப்பது என்பதை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்..

வெயில் சுட்டெரிக்குதா? இந்த ட்ரிங்க்ஸை குடிச்சு பாருங்க.. புத்துணர்ச்சியோட இருப்பீங்க!

எலுமிச்சை, சாத்துக்குடி:

பொதுவாக எலுமிச்சையை தனியாகவும் சாத்துக்குடியை தனியாகவும் தான் ஜூஸாக குடித்திருப்போம். அதை சேர்த்துக் குடித்தால் உடலுக்கு மிக்க நல்லது. 3:1 என்ற அளவில் சாத்துக்குடி மற்றும் எலுமிச்சையை எடுத்துக் கொண்டு அதை நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதை ஃபிரிட்ஜில் வைத்து குளிரூட்டிய பிறகு பருகலாம்.

வெயில் சுட்டெரிக்குதா? இந்த ட்ரிங்க்ஸை குடிச்சு பாருங்க.. புத்துணர்ச்சியோட இருப்பீங்க!

ஸ்ட்ராபெர்ரி:

வெயில் காலத்தில் தண்ணீரில் வெள்ளரிக்காய் உள்ளிட்ட நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை போட்டு குடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கும். அதை போல தான் இந்த ட்ரிங்க்கும். ஒரு குடத்தில் முதலில் ஒரு கையளவு புதினாவை போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, சாத்துக்குடி உள்ளிட்டவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டுக் கொள்ளவும். அதனுடன் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் குளிரூட்டி பருகினால் சிறப்பாக இருக்கும்.

வெயில் சுட்டெரிக்குதா? இந்த ட்ரிங்க்ஸை குடிச்சு பாருங்க.. புத்துணர்ச்சியோட இருப்பீங்க!

ப்ளூபெர்ரி,ஆரஞ்ச் :

ஸ்ட்ராபெர்ரி நீர் போல தான் ப்ளூபெர்ரி நீரும். அதே முறையை பின்பற்றி ப்ளூபெர்ரி, ஆரஞ்ச் நீர் தயாரித்து, 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்த பிறகு பருக வேண்டும். ஆரஞ்சில் இருக்கும் வைட்டமின் சி ஃப்ளூபெர்ரியுடன் சேரும் போது நம் உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.

வெயில் சுட்டெரிக்குதா? இந்த ட்ரிங்க்ஸை குடிச்சு பாருங்க.. புத்துணர்ச்சியோட இருப்பீங்க!

​செர்ரி, புதினா:

ஸ்ட்ராபெர்ரி நீருக்கு செய்ததை போலவே செர்ரி, புதினா உள்ளிட்டவற்றை ஒரு குடத்தில் சேர்த்து ஒரு இரவு முழுக்க ஃபிரிட்ஜில் குளிரூட்ட வேண்டும். இதில் வரும் நறுமணம், தண்ணீர் குடிக்க தூண்டும். இதே போன்று தர்பூசணி, துளசி நீரும் ராஸ்பெர்ரி, புதினா, எலுமிச்சை நீரும் செய்து பருகலாம்.

வெயில் சுட்டெரிக்குதா? இந்த ட்ரிங்க்ஸை குடிச்சு பாருங்க.. புத்துணர்ச்சியோட இருப்பீங்க!

வழக்கமாக தண்ணீர் பருகுவதை விட, மேற்கண்டதை போன்று பழங்கள் சேர்த்து பருகலாம் என்பதை பார்த்தோம். இப்போது அதில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக தண்ணீரில் இருக்கும் சுவை தாகத்தை தணிக்கும். சிலருக்கு கேன் வாட்டர் குடித்துவிட்டு திடீரென சாதராண குடிநீர் குடித்தால், தண்ணீர் குடித்தது போலவே இருக்காது. அது போன்ற பிரச்னைகள் நீங்கும்.

அதே போல, சர்க்கரை சேர்க்காமலேயே இனிப்பு சுவையை கொடுத்து குளிர்பானத்தை சத்து மிக்கதாக மாற்றும். அதோடு, உடலில் இருக்கும் நச்சுத்தன்மையையும் வெளியேற்றவும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் உதவும். மேலும், உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்க இது ஒரு சரியான தீர்வு..!