மதுரை ஆவினில் முறைகேடு கண்டுபிடிப்பு! – நிரந்தரமாக தடுக்க முதல்வருக்கு முகவர்கள் சங்கம் கடிதம்

 

மதுரை ஆவினில் முறைகேடு கண்டுபிடிப்பு! – நிரந்தரமாக தடுக்க முதல்வருக்கு முகவர்கள் சங்கம் கடிதம்

தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனத்தில் நடந்து வரும் முறைகேடுகளை நிரந்தரமாகத் தடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

மதுரை ஆவினில் முறைகேடு கண்டுபிடிப்பு! – நிரந்தரமாக தடுக்க முதல்வருக்கு முகவர்கள் சங்கம் கடிதம்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி ஆவினில் நடைபெறும் முறைகேடு தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் ஒன்றியங்களில் இருக்கும் மொத்த பால் குளிர்விப்பான் (BMC) நிலையங்களிலும், பால் குளிரூட்டும் நிலையங்களிலும் (Milk Cilling Centre) நீண்ட காலமாக பணியாற்றி வரும் பால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பால் குளிர்வு நிலைய பொறுப்பாளர்கள் இடைத்தரகர்களோடும், மோசடிப் பேர்வழிகளோடும் கூட்டு சேர்ந்து கூட்டுறவு சங்க உறுப்பினரிடம் பாலினை கொள்முதல் செய்யாமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ஆவினுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

மதுரை ஆவினில் முறைகேடு கண்டுபிடிப்பு! – நிரந்தரமாக தடுக்க முதல்வருக்கு முகவர்கள் சங்கம் கடிதம்
எனவே ஆவினுக்கு இழப்பை ஏற்படுத்துபவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்க அதிரடி பறக்கும் படை அமைத்திட வேண்டும் என எங்களது சங்கத்தின் சார்பில் கடந்த 13.06.2020அன்று தமிழக முதல்வர் அவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியிருந்த கடிதத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் சிலவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கே பணியாற்றிய திருமங்கலம் ஆவின் மேலாளர் உட்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை ஆவினில் முறைகேடு கண்டுபிடிப்பு! – நிரந்தரமாக தடுக்க முதல்வருக்கு முகவர்கள் சங்கம் கடிதம்
ஆவின் நிறுவன நலன் மீது அக்கறை கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வரும் எங்களது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு நாடகமாக இல்லாமல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மேலும் தமிழகம் முழுவதும் 25ஒன்றியங்களில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலில் விற்பனை போக உபரியாகும் பாலினை சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளுக்கு அனுப்பி பவுடராக மாற்றி இருப்பு வைப்பது தான் வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு திருச்சி மாவட்ட ஆவினில் இருந்து நடைமுறைக்கு மாறாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பவுடராக மாற்றிட கோவையில் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டு அந்த தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்ட பால் பவுடராக மாற்றிய பிறகு சுமார் இருநூறு டன் ஆவினுக்கு வந்து சேராமல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே ஆவின் பால் பண்ணைகளில் பால் பவுடராக மாற்றுவதற்கான போதிய வசதிகள் இருந்தும் விதிமுறைகளுக்கு மாறாக தனியார் பால் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பவுடராக மாற்றிட கோவையில் ரகசிய ஒப்பந்தம் போட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் யார்..? யார்..? என்பது குறித்தும், திருச்சி மாவட்ட ஆவினில் இருந்து மட்டுமின்றி வேறு எந்தெந்த மாவட்ட ஆவினில் இருந்து தனியார் பால் தொழிற்சாலைக்கு பால் அனுப்பப்பட்டது என்பது குறித்தும், அந்த தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்ட பாலினை பவுடராக மாற்றிய பிறகும் ஆவினுக்கு இன்னும் வந்து சேராமல் இருப்பது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை ஆவினில் முறைகேடு கண்டுபிடிப்பு! – நிரந்தரமாக தடுக்க முதல்வருக்கு முகவர்கள் சங்கம் கடிதம்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள் பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாத்திட அயல்நாடுகளில் இருந்து பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதித்தார். ஆனால் கொரோனா பேரிடர் காலமான தற்போது ஊரடங்கு 5வது மாதத்தை நெருங்கியுள்ள நேரத்தில் வணிகம் சார்ந்த பால் விற்பனை என்பது வெகுவாக குறைந்து பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு பால் பவுடர் இறக்குமதிக்கான தடையை நீக்கி சுமார் 10 ஆயிரம் டன் பால் பவுடர் இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுலில் இருக்கும் காரணத்தால் தமிழகத்தில் பால் விற்பனை கடுமையான வீழ்ச்சியை சந்திருக்கிறது. அதனால் பால் கொள்முதல் விலையும் கடும் சரிவை கண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் கறவை மாடுகளை பராமரிக்க முடியாமலும், மாட்டுத்தீவனம் வாங்கிட முடியாமல் அல்லல்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்நிலையில் அயல்நாடுகளில் இருந்து சுமார் 10ஆயிரம் டன் பால் பவுடர் இறக்குமதி செய்ய அனுமதித்தால் தற்போதுள்ள சூழலில் நமது பால் உற்பத்தியாளர்கள் இன்னும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். அதனால் மாடுகளை பராமரிக்க முடியாமல் இறைச்சிக்காக விற்பனை செய்யும் நிலைக்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்படுவார்கள். எனவே பால் உற்பத்தியாளர்களை பாதிக்கும் பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதிக்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்திட வேண்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.