தமிழகத்தின் 16 மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளின் விவரங்கள் வெளியீடு!

 

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளின் விவரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு மேல் பரவி வருகிறது. முன்னதாக ஒரு நாளைக்கு 400 முதல் 600 வரையிலேயே இருந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது இரு மடங்காக பரவி வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 1,927 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளின் விவரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அம்மாவட்டங்களின் எந்த இடம் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மொத்தம் 16 மாவட்டங்களில் தான் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாகவும் மற்ற 21 மாவட்டங்களில் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டவாரியான விவரம்:

அரியலூர்- 1
செங்கல்பட்டு-7
சென்னை-201
கடலூர்-26
கள்ளக்குறிச்சி-5
காஞ்சிபுரம்-13
கன்னியாகுமரி-1
நாகப்பட்டினம்-9
ராமநாதபுரம்-1
ராணிப்பேட்டை-1
தென்காசி-6
தஞ்சாவூர்-1
தூத்துக்குடி-2
திருநெல்வேலி-7
திருப்பத்தூர்-4
திருவண்ணாமலை-29